districts

img

உரிமையை பறிக்கும் கோவில் நிர்வாகம்

உடுமலை, டிச.23- பஞ்சலிங்க அருவிக்கு செல்லும் சுற் றுலா பயணிகளிடம் வசூல் செய்யும் உரிமை மலைவாழ் மக்களிடம் இருந்ததை கோவில் நிர்வாகம் தனதாக்கிக் கொண்டதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே மேற்கு தொடர்சி மலை பகுதியில் உள்ள  திருமூர்த்தி மலை அடிவார பகுதியில் அம ணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த  கோவில் இருக்கும் பகுதியில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் மலைக்கு மேல் பகுதியில் சுற்றுலா பயணிகளை கவ ரும் வகையில்  செயற்கையாக அருவி உரு வாக்கப்பட்டு உள்ளது. பஞ்சலிங்க அறி விக்கு செல்ல முன்பு வனத்துறையின் மூலம் குறிப்பிட்ட கட்டணம் வசூல் செய்யப்பட் டது. இதுதொடர்பாக மலைவாழ் மக்கள்  சங்கத்தினர் நடத்திய போராட்டத்தின் விளைவாக கட்டணம் வசூல் செய்யும் உரிமை மலைவாழ் மக்களிடம் ஒப்படைக் கப்பட்டு, கடந்த பல வருடங்கள் அவை நடை முறையில் இருந்து வருகிறது. இச்சூழலில் கடந்த இரண்டு ஆண்டுகள்  கொரானா நோய் தடுப்பு காரணமாக சுற் றுலா பயணிகள் பஞ்சலிங்க அருவிக்கு செல்ல அனுமதி மறுக்கபட்டது.

இதன்பின் கடந்த டிச.22 ஆம் தேதி முதல் அருவிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. அதே நேரம், கட்டணம் வசூல் செய்யும் உரி மையை, மலைவாழ் மக்களிடம் ஒப்படைக் காமல் கோவில் நிர்வாகமே அருவி பரா மரிப்பு கட்டணத்தை வசூல் செய்ய துவங்கி யுள்ளது. இது மலைவாழ் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  முன்னதாக, 2006 ஆம் ஆண்டு வன உரிமை சட்டப்படி மலைவாழ் மக்களுக்கு அருகில் உள்ள கோவில் வருமானத்தில் 10 சதவிகிதம் மலைவாழ் மக்களின் நலனுக்கு பயன்படுத்த வேண்டும். கோவில் மற்றும் மலை பாதைகளை பராமரிக்க மலைவாழ் மக்களை பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறையும் உள்ளது. ஆனால், இவை எதுவும் அமல்படுத்தப்படாததுடன், கோவில் நிர்வாகம் படிப்படியாக மலை வாழ் மக்களின் உரிமைகளை  பறித்து வருவ தாக குற்றம்சாட்டப்படுகிறது.  ஆகவே, இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

;