districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

போக்சோவில் வாலிபர் கைது

சூலூர், ஜூலை 24- 16 வயது சிறுமியை கடத்திச்சென்ற வாலிபரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சேலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, கோவை அரசூரில் உள்ள தனியார் நூற்பாலையில் தங்கி பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவரது சகோதரருடன் ஊருக்கு கிளம்பிய போது, திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் சூலூர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில், சனியன்று  அந்த சிறுமி மற்றும் பவானியைச் சேர்ந்த தாமரைக்கண்ணன் (24) என்பவரையும் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்திலுள்ள ஒரு கட்டுமான தளத்தில் கண்டுபிடித்தனர். இதைத்தொ டர்ந்து இருவரையும் சூலூர் காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார், 16 வயது  சிறுமியை அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். தாமரைக் கண்ணனை போக்சோ சட்டத் தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.

ஈரோடு: கார் கொள்ளையர்கள் கைது

ஈரோடு, ஜூலை 24- தேனி மாவட்ட விவசாயிடம் ரூ.35 லட் சத்தை கொள்ளையடித்த ஏழு பேர் கொண்ட கார் கொள்ளையர்களில் இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். தேனி மாவட்டம், சின்ன ஓலாபுரம் பகுதி யைச் சேர்ந்தவர் சிவாஜி. விவசாயியான இவ ருக்கு உசிலம்பட்டி அருகே உள்ள காலப் பண்பட்டி பகுதியைச் சேர்ந்த பாண்டி என்ப வர் அறிமுகமாகியுள்ளார். சிவாஜியிடம், பாண்டி ஈரோட்டில் எனக்கு தெரிந்த ராஜ் குமார் என்ற நபரிடம் 2000 ரூபாய் நோட்டு கள் அதிகளவில் உள்ளன. 35 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால், 50 லட்சம் ரூபாய், 2000  ரூபாய் நோட்டுக்களை வழங்குவதாக பாண்டி தெரிவித்துள்ளார். இதனை நம்பி ரூ.35 லட்சத்தை தனது வங்கி கணக்கிலி ருந்து எடுத்துக்கொண்டு உறவினர்கள் செந் தில், மாதேஷ், குமார் மற்றும் ஓட்டுநர் குபேந் திரன் ஆகியோருடன் லக்காபுரம் அருகே உள்ள பரிசல் துறைக்கு வந்தார். இதன்பின் ராஜ்குமார் இரண்டு நபர்களுடன் வந்து சிவாஜியை சந்தித்து பணம் தருவதாக கூறி, தனது காரில் சிவாஜியையும் சிவாஜி உறவி னர் செந்தில் இருவரையும் ஏற்றுக் கொண்டு பரிசல் துறையில் இருந்து பெருந்துறை நோக்கி புறப்பட்டார். கார் சிறிது தூரம் சென்றவுடன் எதிரே வந்த காரில் இருந்த நான்கு நபர்கள் ராஜ்குமா ரின் காரை வழிமறித்தனர். நாங்கள் அரசு அதிகாரிகள் எனக்கூறி காரில் இருந்த சிவாஜி மற்றும் செந்தில் ஆகிய இருவரையும் கீழே இறக்கி விட்டனர். இதனை அடுத்து ராஜ் குமார் காரில் வைத்திருந்த ரூ.35 லட்சம்  பணத்தோடு அந்த கும்பல் தப்பித்து சென் றது. இவ்வாறு தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சிவாஜி, இழந்த பணத்தை மீட்டுத் தருமாறு மொடக்குறிச்சி காவல் நிலையத் தில் புகாரளித்தார். இதனையடுத்து ஆய்வா ளர் தீபா தலைமையில் தனிப்படை அமைக் கப்பட்டது. கார் கொள்ளையர்களின் செல் போன் எண்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் தீவிர புலனாய்வு மேற் கொண்டனர். இதில் கரூர் மாவட்டம், நாகம்பள்ளி அரசு  மருத்துவமனை அருகே உள்ள மலைக் கோவிலூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சிக்கினார். அவரிடம் நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து, அரசு அதிகாரி போல் போலியான போலீஸ் உடை அணிந்து நடித்த நாமக்கல் மாவட்டம், வேலூர் அடுத்த போத்தனூர் சாந்தி நகர் பகுதியைச் சேர்ந்த  மாதேஷ் என்பவர் பாசூரில் கைது செய்யப் பட்டார். மேலும் தலைமறைவாக உள்ள நபர் களை காவல் துறையினர் தேடி வருகின்ற னர்.

சான்றிதழ்களை தர மறுக்கும் தனியார் பள்ளி ஆட்சியர் அலுவலகத்தில் ஆசிரியர்கள் புகார்

சேலம், ஜூலை 24- சான்றிதழ்களையும், பள்ளி மாணவர்களின் பதிவுகளை தர மறுக்கும் தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்தனர். சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன் பாளையம், வைத்தி யகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் 10க்கும் மேற்பட்டோர் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதன்பின் செய்தியாளர்களிடம் கூறுகை யில், வைத்தியகவுண்டன்புதூர் பகுதியில் ஸ்ரீஅமித் வித்யா லயா மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி (தனியார்) செயல்பட்டு வரு கிறது. இப்பள்ளியில் சுமார் 400க்கும் மேற்பட்ட குழந்தை கள் படித்து வந்த நிலையில், கொரோனா பெருந்தொற் றுக்குப் பிறகு அப்பள்ளியில் 90 மாணவர்கள் மட்டுமே தற் போது படித்து வருகின்றனர். பள்ளியின் ஏழு பேர் பங்கு தாரராகவும் இருந்தனர். தற்போது பல்வேறு பிரச்சனையின் காரணமாக ஆறு பங்குதாரர்கள் விலகி விட்ட நிலையில், சர வணன் என்பவர் பள்ளியை நிர்வாகித்து வருகிறார். பள்ளி யில் பணிபுரியும் ஆசிரியர்கள் வேறு பணிக்கு செல்ல நிர் வாக இயக்குநரும், தாளாளராகவும் இருக்கக்கூடிய சர வணன் சான்றிதழ்களை தர மறுத்து, மிரட்டல் விடுகிறார். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரியிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. மேலும், 70 மாணவர்களின் எமிஸ் இணையதளத்தில் உள்ளதா? என கண்டறிய கேட்டதற்கு இணையதள கடவுச் சொல்லை தர மறுத்து வருகிறார். இதற்கு பள்ளி கல்வித் துறையில் பணிபுரியும் அவரது மனைவியும் உடந்தையாக உள்ளார். தற்போது ஆசிரியராகிய நாங்கள் வேறு பணிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றோம். பள்ளி மாண வர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. எனவே, எங்களின் சான்றிதழ்களையும், பள்ளி மாணவர்களின் எமிஸ் சொல்லக்கூடிய ஆவணங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

திருப்பூரில் சிற்றிதழ்கள் கண்காட்சி

திருப்பூர், ஜூலை 24 – திருப்பூரில் ஞாயிறன்று தொடங்கிய சிற்றிதழ்கள் கண் காட்சி வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  சிற்றிதழ்கள் எனப்படும் இலக்கிய பத்திரிக்கைகள் இலக் கிய வளர்ச்சிக்கு உதவுபவை. எழுத்தாளர்கள் எழுத்தைப் பழ கும் இடமாகவும், பரிசோதனை முயற்சி செய்யும் இடமாகவும் சிற்றிதழ்கள் இருக்கின்றன. நூற்றுக்கணக்கான பத்தி ரிக்கைகள் உள்ளன. இந்த சிற்றிதழ்கள் கடந்த 100 ஆண்டு களுக்கு மேலாக தமிழில் வந்துள்ளன. அவற்றின் கண் காட்சி திருப்பூர் மக்கள் மாமன்றத்தில் ஞாயிறன்று தொடங்கி யது. வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை இக்கண்காட்சி நடை பெறும். புதிதாக எழுத வருகிறவர்களும், இலக்கிய வாசகர்க ளும், இலக்கிய மாணவர்களும் கண்டு பயன் பெறலாம். சிற்றி தழ் பொக்கிசங்களைக் காணலாம் என்று எழுத்தாளர் சுப்ர பாரதிமணியன் தெரிவித்துள்ளார். எழுத்தாளர் மதுராந்தகன் இந்த கண்காட்சி அமைப்பாளராக செயல்பட்டு இதை ஏற்பாடு செய்துள்ளார்.

நுண்ணீர் பாசனத்திற்கு ரூ.20.71 கோடி ஒதுக்கீடு

திருப்பூர், ஜூலை 24 - திருப்பூர் மாவட்டத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்க விரும் பும் விவசாயிகள் தங்களது விண்ணப்பங்களை கணிப்பொறி யின் http://tnhorticulture.tn.gov.in/horti/mimis/  என்ற  இணைய தளத்தில் பதிவு செய்து முன்னுரிமை பெறலாம்  என  தெரிவிக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலைப் பயிர்களான பழப்பயிர்கள், காய்கறி கள், மலர்ப்பயிர்கள், வாசனை திரவிய பயிர்கள் மற்றும் தோட்டப் பயிர்கள் சாகுபடி செய்யும் சிறு குறு விவசாயிக ளுக்கு (2 எக்டர் வரை விவசாய நிலமுள்ளவர்கள்) 100% மானி யத்தில் எக்டருக்கு அதிகபட்சமாக ரூ.1,35,855/- வரையும், இதர விவசாயிகளுக்கு (2 எக்டருக்கு மேல் விவசாய நில முள்ளவர்கள்) 75 சதவிகிதம் மானியத்தில் எக்டருக்கு அதிக பட்சமாக ரூ.1,05,530/-- வரையும் நுண்ணீர்ப்பாசனம் அமைக் கும் பயிரின் இடைவெளியை பொறுத்து மானியம் பெற லாம். இத்திட்டத்திற்காக நடப்பு ஆண்டில் 2625 எக்டர் பரப் பில் சொட்டு நீர் பாசனம் அமைத்திட ரூ.20.71 கோடி நிதி  ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் தங்களது நில ஆவணங்களான சிட்டா, அடங்கல், 3 புகைப்படம், நில வரைபடம், கிணறு அல்லது போர்வெல் உள்ளதற்கான சான்று, குடும்ப அட்டை மற்றும் ஆதார் கார்டு முதலியவற்றை எடுத்து வந்து நேரிலும் முன் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் இடையே மோதல்; காவல் துறை விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பூர், ஜூலை 24 - திருப்பூரில் அரசுப்பள்ளி மாணவர்கள் இடையே அடிக்கடி  ஏற்படும் மோதல்களை தடுக்கும்  வகையில் மாநகர காவல் துறையின் சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.  திருப்பூரில் அரசுப்பள்ளி மாணவர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்கும் வகையிலும், மாணவர்களுக்கு போதைப்பொருட்களினால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் திருப்பூர் மாநகர காவல் துறையினர் பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பேருந்து நிலை யங்களில் இரண்டு அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த மாண வர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதனை தடுக்கும் வகை யில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில் திருப்பூர் பழைய பேருந்து நிலை யம் அருகில் செயல்பட்டு வரும் கே.எஸ்.சி. அரசு மேல் நிலைப்பள்ளியில் தெற்கு சரக காவல் உதவி ஆணையர் கார்த்திகேயன், தெற்கு காவல் ஆய்வாளர் கணேசன் ஆகி யோர் பள்ளிக்கு வருகை தந்து மாணவர்கள் படிக்கும் காலத் தில் இது போன்ற தீய செயல்களில் ஈடுபடக்கூடாது. காவல் துறை பொது மக்களின் நண்பனாக செயல்படும். ஆனால் இது போன்ற தீய செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டால் காவல் துறை தனது கடமையைச் செய்யும் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவக் குமார், உதவி தலைமை ஆசிரியர் வசந்தாமணி உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

ரேக்ளா போட்டி

உடுமலை, ஜூலை 24- தமிழக முன்னாள் முதல் வர் மு.கருணாநிதி நூற் றாண்டு பிறந்தநாள் விழா மற் றும் தீரன் சின்னமலை 218 ஆம் நினைவு நாளை முன் னிட்டு உடுமலை அடுத்த பள் ளபாளையத்தில் ரேக்ளா போட்டி நடைபெற்றது. இந்த ரேக்ளா போட்டியை திருப் பூர் தெற்கு மாவட்ட திமுக அவைத்தலைவரும், முன் னாள் சட்டப்பேரவை உறுப் பினருமான இரா.ஜெயராம கிருஷ்ணன் துவக்கி வைத் தார். இதில் ஏராளமான மாட் டுவண்டிகள் கலந்து கொண் டன.

மகளை கேலி செய்தவர்களை  தட்டிக்கேட்ட தந்தை மீது தாக்குதல்

கோவை, ஜூலை 24- வெள்ளலூர் அருகே மகளை கேலி செய்தவர்களை தட் டிக்கேட்ட தந்தை மீது தாக்குதல் நடத்திய 2 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டம், வெள்ளலூர், ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த தூய்மை பணியாளரான சுரேந்திரனின் மகள், வீட்டிற்கு  வெளியே குப்பை கொட்ட சென்றார். அப்போது அங்கிருந்த 2  வாலிபர்கள் அவரை கேலி, கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து அவர் தனது தந்தையிடம் தெரிவித்தார். உடனே அவர் 2 வாலிபர்களையும் கண்டித்துள்ளார். இதனால் அவர்க ளுக்கு முன் விரோதம் உருவானது. இந்நிலையில், வீட்டிலி ருந்த சுரேந்திரனை, 2 வாலிபர்கள் தகாத வார்த்தைகளால் பேசி உருட்டுக்கட்டை மற்றும் பிளாஸ்டிக் பைப்பால் தாக்கி னார். இதில் அவருக்கு தலை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து சுரேந்திரன் போத்தனூர் காவல் நிலை யத்தில் புகாரளித்தார். அதன்பேரில், போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த கிஷோர், பாபு ஆகிய இரண்டு வாலிபர் கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பணம் பறிப்பு

கோவை, ஜூலை 24- ராமநாதபுரம் மாவட்டத் தைச் சேர்ந்த வேலு (49) என் பவர், பேரூர் சாலையிலுள்ள மதுபானக்கூடத்தில் வேலை  பார்த்து வருகிறார். இந்நிலை யில், மதுபானக்கடையில் பின் புறம் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த 3 பேர் கத் தியை காட்டி மிரட்டி வேலு விடமிருந்த ரூ.150ஐ பறித்து விட்டு தப்பி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் செல் வபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சொக்கம்பு தூர் பகுதியைச் சேர்ந்த  தீனதயாளன் (28), தனராஜ் (27) மற்றும் கோவைப்புதூர், அறிவொளி நகரைச் சேர்ந்த டேவிட் (28) ஆகியோரை கைது செய்தனர்.