கோவை, மே 17- கோவை, மலுமிச்சம்பட்டியில் நச்சுப்புகை பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக செயல்பட்ட தார் தொழிற் சாலைக்கு தடை விதித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தர விட்டு உள்ளது. கோவை, மதுக்கரை வட்டத் துக்கு உட்பட்ட மலுமிச்சம்பட் டியில் உள்ள தார் தொழிற்சாலை யில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையால் சுற்றுச்சூழல் பாதிக்கப் படுவதாகவும், சம்பந்தப்பட்ட தொழிற்சாலை மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச் சூழல் பொறியாளரிடம் விவசாயி கள் அண்மையில் புகார் தெரிவித் தனர். இது தொடர்பாக நடவ டிக்கை மேற்கொண்ட மாசு கட்டுப் பாட்டு வாரியம், சம்பந்தப்பட்ட தொழிற்சாலையை மூட உத்தர விட்டது. இதைத்தொடர்ந்து, தொழிற் சாலையை மூடிய தனியார் நிர்வாகம் அதற்கு அருகில் மின்வாரியம், மாசு கட்டுப்பாடு வாரிய அனுமதி பெறாமல் ஜென ரேட்டர் உதவியுடன் மற்றொரு தொழிற்சாலையை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளி யேறும் நச்சுப் புகையால் அப்பகு தியினர் அவதிக்கு உள்ளாகி வரு கின்றனர். இதுதொடர்பாக சென்னை மாசு கட்டுப்பாட்டு வாரி யத்திற்கு கட்சி சார்பற்ற விவசா யிகள் சங்கத்தினர் புகார் மனு அனுப்பி இருந்தனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட தொழிற்சாலை இயங்க தடை விதிக்க உத்தரவிட்டும், உடனடி யாக அந்த தொழிற்சாலை மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்து ரைக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வரு வாய் கோட்டாட்சியர், கோவை தெற்கு மதுக்கரை வட்டாட்சியர், மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் உள்ளிட்டோருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதில் மலுமிச்சம்பட்டியில் இயங்கும் தார் தொழிற்சாலைக்கு தடைவி தித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆணையிட்டு உள்ளது. இந்த ஆணையின் மீது நடவடிக்கை மேற்கொண்டு அறிக்கை சமர்ப் பிக்க வேண்டும் என தெரிவிக்கப் பட்டு உள்ளது.