கோவை, பிப். 26- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திரைப்பள்ளி சார்பாக மூன்றாம் கல்வியாண்டின் நிறைவு வகுப்பு மற்றும் நிறைவு விழா கோவையில் கிளஸ்டர் மீடியா கல்லூரி யில் அன்மையில் நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் கோவை மாவட்டக் குழு சார்பில், ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு நாள் நிகழ்ச்சியில் இயக்குனர் சிவக்குமார், எழுத்தாளர். களப்பிரன், மாநில ஒருங் கிணைப்பாளர் தமிழ்மணி, மூத்த எழுத்தாளர் ச.தமிழ் செல்வன், மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா, இயக்குனர் பாஸ்கர் சக்தி, கேபிள் சங்கர் உள்ளிட்ட ஆளுமைகள் கலந்து கொண்டு மாணவர் களுக்கு சினிமா குறித்த வகுப்பை எடுத்தனர். இதில், கோவை மாவட்ட தமுஎகச மாவட்டத் தலைவர் தி.மணி, மாவட்டச் செயலாளர் அ .கரீம், மாநில குழு உறுப்பினர்கள் மு.ஆனந்தன், அருள் மணி, தங்க முருகேசன், காளிநாதன், இயக்குநர்.ஜின்னா, கிளஸ்டர் மீடியா கல்லூரியின் நிர்வாக இயக்குநர் அரவிந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.