districts

img

க.அய்யம்பாளையம் விவசாய தியாகிகளுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அஞ்சலி

திருப்பூர், ஜூலை 5 - திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட் டம், க.அய்யம்பாளையம் விவசாய தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. 1972 ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம்  தேதி அப்போதைய அரசு விவசாய  பம்பு செட்டுக்கு 1 பைசா மின் கட்ட ணம் உயர்வை இதை எதிர்த்து  போராட்ட நடத்திய விவசாயிகள் மீது  காவல்துறை துப்பாக்கி சூடு நடத்திய போது க.அய்யம்பாளையத்தை சேர்ந்த ஏ.ஆர்.சுப்பையன், என்.முத்துக்குமாரசாமி ஆகியோர் உயிரி ழந்தனர். இவர்களின் தியாகத்தை உயர்த் திப் பிடிக்கும் வகையில் 51-ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி ஜூலை 5ஆம் தேதி புதனன்று காலை  10.30 மணியளவில் க.அய்யம்பாளை யம் விவசாய தியாகிகள் நினைவு ஸ்தூபியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பல்லடம் ஒன்றிய செய லாளர் வை.பழனிசாமி தலைமை யில் நடைபெற்றது. மாவட்ட செயலா ளர் ஆர் குமார் முன்னிலை வகித் தார். மாநில துணைத் தலைவர் எஸ். ஆர்.மதுசூதனன், சி.பி.எம்‌ மாவட்ட  செயலாளர் செ‌.முத்துக்கண்ணன்  ஆகியோர் நினைவுரையாற்றினார் கள். தியாகிகள் குடும்பத்திற்கு பொன்னாடை அணிவித்து நினைவு  புத்தகம் வழங்கி கெளரவிக்கப்பட் டது.  இந்நிகழ்வில் சிஐடியு மாவட்ட  துணை தலைவர் கே.உண்ணிகி ருஷ்ணன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலா ளர் அ.பஞ்சலிங்கம், மாவட்ட குழு  உறுப்பினர் ஏ.ராஜகோபால், தென்னை சங்க மாவட்ட பொருளா ளர் அ.லெனின், கோவை மாவட்ட  துணை செயலாளர் ரவீந்திரன், தவிச  பல்லடம் ஒன்றிய பொருளாளர் லோகநாதன், சி.பி.எம். பல்லடம் ஒன் றிய செயலாளர் பரமசிவம் உள்ளிட்ட  திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர். பல்லடம் த.வி.ச. ஒன் றிய தலைவர் கே.வி.சுப்பிரமணியம் நன்றி தெரிவித்தார்.