திருப்பூர், மார்ச் 19- திருப்பூரில் மார்ச் 28, 29ஆம் தேதி அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு பல்வேறு அமைப்பி னரிடம் தொழிற்சங்க நிர்வாகிகள் நேரில் ஆதரவு கேட்டு கடிதம் அளித்த னர். ஒன்றிய பாஜக மோடி அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, தேச விரோத நடவடிக்கைகளை கண் டித்தும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாகவும், சிறு, குறு தொழில் களை பாதுகாக்க தவறிய மோடி பாஜக அரசை கண்டித்தும் மார்ச் 28, 29 தேதிக ளில் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மார்ச் 28 ஆம் தேதி நடை பெறும் ரயில் மறியல் மற்றும் மார்ச் 29 ஆம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டத்திற்கு ஆத ரவு வழங்குமாறு திருப்பூர் பகுதிக ளில் உள்ள ஓட்டல் உரிமையாளர் கள் சங்கம், மளிகை கடை வியாபாரி கள் சங்கம், அரிசி மண்டி வியாபாரிகள் சங்கம் மற்றும் அனைத்து வியாபாரி கள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகளுக் கும் திருப்பூா் மாவட்ட சிஐடியூ, எல்பிஎப், ஐஎன்டியூசி, ஏஐடியுசி, எச்எம்எஸ், எம்எல்எப் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் நிர் வாகிகள் சார்பில் நேரில் கடிதம் கொடுக்கப்பட்டது.