districts

img

விவசாயிகள் விரோத சட்டங்களை திரும்பப் பெறுக மாணவர் சங்கத்தினர் ஆவேசம் - போலீசார் அராஜகம்

கோவை, டிச. 1 - மத்திய அரசின் வேளாண் விரோதச் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி கோவையில் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர் சங் கத்தினர் மீது போலீசார் கொடூர தாக்குதலை தொடுத்து கைது செய் தனர். மத்திய அரசின் விவசாய விரோத வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை, மத்திய மோடி அரசு  உரிய முறையில் அழைத்து பேச்சு வார்த்தை நடத்திட முன் வர வேண் டும். விவசாயிகள் மீது அடக்கு முறைகளை ஏவுவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் கோவை உக்கடம் காவல்நிலையம் முன்பு செவ்வாயன்று மாலை சாலை  மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.  இந்நிலையில், இப்போராட் டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் கைது செய்த போலீசார், அவர்களை  அராஜகமான முறையில் தரதர வென இழுத்துச் சென்றனர். குறிப் பாக, போராட்டத்திற்கு தலைமை தாங்கிய மாணவர் சங்கத்தின் மாநில செயலாளர் வீ.மாரியப்பன், மாவட்டத் தலைவர் அசாருதீன், மாவட்ட செயலாளர் தினேஷ் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகளை கண்மூடித்தனமாக தாக்கிய காவல்துறையினர் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று  காவல் வாகனத்தில் ஏற்றிச் சென்ற னர். இதேபோல் மாணவிகள் உள் ளிட்டோரையும் போலீசார் கொடூர தாக்குதலை ஏவி கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பர பரப்பான சூழல் ஏற்பட்டது.

;