districts

img

வேலை நிறுத்தம், முற்றுகை: கோரிக்கை ஏற்று உறுதியளிப்பு

திருப்பூர், அக். 10 - திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட ஆறு  நகராட்சிகளில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் தினக்கூலி பணியாளர்கள், மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த ஊதியம்  வழங்கக் கோரி திங்களன்று வேலைநிறுத்தப்  போராட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு சங்கத் தின் தலைமையில் நகராட்சிகள் நிர்வாக மண் டல இயக்குநர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.  திருப்பூர் மாநகராட்சி மற்றும் உடுமலை,  தாராபுரம், வெள்ளகோவில், காங்கேயம், பல்லடம், திருமுருகன் பூண்டி ஆகிய 6 நக ராட்சிகளில் வேலை செய்யும் தற்காலிக தூய்மை பணியாளர்கள், குடிநீர் பணியாளர் கள், வாகன ஓட்டுநர் மற்றும் கொசுப்புழு ஒழிப்பு ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் நிர்ண யித்துள்ள ஊதிய உயர்வை வழங்க வலியு றுத்தியும், போனஸ் வழங்கக் கோரியும், தொழிலாளர் வைப்பு நிதித் திட்டத்தில் (இபிஎப்) பிடித்தம் செய்யும் தொகைக்கு ரசீது  வழங்கவும், பணி நிரந்தரம் செய்து, தனியார்  மயத்தைக் கைவிடவும் வலியுறுத்தி அதிகாரி களுக்கு கோரிக்கை மனுக்கள் பல முறை  கொடுத்தும் எவ்வித பலனும் இல்லை. இதை யடுத்து திங்களன்று மாநகராட்சி மற்றும் ஆறு  நகராட்சிகளிலும் வேலை நிறுத்தம் செய்யப்  போவதாக அறிவித்தனர். 

மேயர் பேச்சுவார்த்தை

இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார், துணை மேயர்  ஆர்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் சிஐடியு  நிர்வாகிகள் கே.காமராஜ், கே.உண்ணிகி ருஷ்ணன், சி.மூர்த்தி, கே.ரங்கராஜ் ஆகியோ ருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், மாந கராட்சி ஒப்பந்த பணியாளர்களுக்கு  சட்டப் படி போனஸ் வழங்க ஆணையர் உத்தர விட்டார். மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ள ஊதியம் வழங்குவது, இபிஎப் பிடித்தத்தில் ஒப்பந்ததாரர் பங்குத் தொகை குறித்த கோரிக்கை மீது ஒரு வார காலத்தில் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண்பது என  ஒப்புக்கொள்ளப்பட்டது. எனினும் மற்ற ஆறு நகராட்சிகளில் அதி காரிகள் தரப்பில் எவ்வித பேச்சுவார்த்தைக் கும் முன்வரவில்லை. இதையடுத்து திங்க ளன்று திட்டமிட்டபடி ஆறு நகராட்சிகளைச் சேர்ந்த ஒப்பந்தப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் திருப்பூரில்  உள்ள நகராட்சிகள் நிர்வாக மண்டல இயக்கு நர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சுமார்  300 பேர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அலுவலகம் முற்றுகை

அதிகாரிகள் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தவோ, பிரச்சனைக்குத் தீர்வு காணவோ  யாரும் முன்வராத நிலையில் அந்த அலுவல கத்தை முற்றுகையிட்டு அனைத்து தொழிலா ளர்களும் அங்கேயே அமர்ந்து காலை முதல்  போராட்டத்தைத் தொடர்ந்தனர்.  ஐந்து மணி  நேரத்துக்கு மேலாக போராட்டம் நீடித்த  நிலையில், ஆறு நகராட்சிகளின் ஆணை யர்கள் மாலை 5 மணியளவில் அங்கு வந்து  சிஐடியு சங்க நிர்வாகிகள் கே.ரங்கராஜ்,  சி. மூர்த்தி, பி.பழனிசாமி, சுப்பிரமணியம் உள் ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையில், ஒப்பந்த தொழி லாளர்களுக்கு ஆட்சியர் அறிவித்துள்ள ஊதிய நிர்ணயம் தொடர்பாக சில தெளிவு  தேவைப்படும் நிலையில், மாநில நகராட்சி கள் நிர்வாக இயக்குநரிடம் ஆலோசனை பெற்று அதன் அடிப்படையில் அடுத்த பத்து  தினங்களில் ஊதிய உயர்வுக்கு உரிய தீர்வு  காண்பது, போனஸ் சட்டப்படி இத்தொழி லாளர்களுக்கு போனஸ் வழங்க உத்தரவு பிறப்பிப்பது, இபிஎப் தொடர்பாக கடந்த  மாதம் வழங்கிய சம்பளம், பிடித்தம் செய்த தொகை விபரம் உள்ளிட்ட பட்டியலை தொழி லாளர்கள் அறிந்து கொள்ள தருவது என்றும்  நகராட்சி ஆணையர்கள் ஒப்புக் கொண்ட னர்.  பேச்சுவார்த்தை விபரங்களை உள் ளாட்சி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் தொழிலாளர்களிடம் தெரிவித் தார். இதன் அடிப்படையில் இன்றைய வேலை நிறுத்த, முற்றுகைப் போராட்டம் நிறைவு பெற்றது.