districts

img

கோவை நகரின் மையப்பகுதியில் டாக்டர் அம்பேத்கர் சிலை ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தல்

கோவை, டிச.1–  கோவை நகரின் மையப்பகுதி யில் டாக்டர் அம்பேத்கர் சிலையை அமைக்க மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்து ஜனநாயக முற்போக்கு அமைப்புகளின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. கோவை ஒருங்கிணைந்த நீதி மன்றம் அருகே அம்பேத்கர் சிலை  அமைக்க கடந்த 2007 ஆம் ஆண்டு  கோவை மாநகராட்சி மன்றத்தில் எவ்வித எதிர்ப்புமின்றி ஏகமன தாக தீர்மானம் நிறைவேற்றப்பட் ்டது. ஆனால், இத்தீர்மானம் நிறை வேற்றப்பட்டு 13 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், காவல்துறையி னரின் ஆட்சேபனையின் காரண மாக சிலை அமைக்கும் பணி முடக் கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட ஜனநாயக முற்போக்கு அமைப்பு கள் தொடர்ந்து வலியுறுத்தி இயக்கங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், கோவை காந்தி புரம் பெரியார் படிப்பகத்தில் அனைத்து ஜனநாயக இயக்கங் களின் கூட்டமைப்பு ஆலோ சனைக் கூட்டம் திங்களன்று நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சிபிஎம், விடுதலைச் சிறுத்தைகள், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தபெதிக, திராவிட தமிழர் கட்சி, ஆதி தமிழர் பேரவை, திவிக, மக்கள் அதிகாரம் உட்பட 20க்கும் மேற்பட்ட அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து கூட்டத்தின் முடிவுகள் குறித்து பி.ஆர்.நடரா ஜன் எம்.பி., கூறுகையில், கோவை  மாநகராட்சியில்  2007 ஆம் ஆண்டு நிறைவேற்றிய  தீர்மானத்தின்படி அம்பேத்கர் சிலை அமைத்திட வேண்டும். குறிப்பாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரிலோ,  நீதிமன்றத்தின் எதி ரிலோ அல்லது நஞ்சப்பா சாலை  ஆகிய  ஏதேனும் ஒரு இடங்களில் அம்பேத்கர்  சிலையை நிறு வக்கோரி டிச.14 ஆம் தேதி மாவட்ட  ஆட்சியரை சந்தித்து அனைத்து அமைப்புகளின் சார்பில் வலியு றுத்துவது என முடிவு செய்யப்பட் டுள்ளது.

முன்னதாக, இதே கோரிக் கையை வலியுறுத்தி டிசம்பர் 6 ஆம் தேதி அனைத்து ஜனநாயக அமைப்புகளின் சார்பில் சிவா னந்த காலனியில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது. இதே போல், அம்பேத்கர் சிலை அமைப் பதற்கு ஆதரவு கேட்டு அமைச்சர் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஆதரவுக் கடிதங்களைப் பெறுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.