districts

img

குரூப்4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

நாமக்கல், மே 29- திருச்செங்கோடு டாக்டர் அம்பேத்கர் இலவச கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் சார்பில் குரூப்  4 அரசு போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டது.  தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் சார் பில் குரூப் 4 போட்டி தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட் டது. அந்த போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்  திருச்செங்கோடு  சிஎச்பி காலனியில் உள்ள  அவ்வை கல்வி நிலையத்தில் தொடங்கியது. இந்நிகழ் விற்கு எல்.ஐ.சி உதவி கிளை மேலாளர்  கே.முருகேசன் தலைமை வகித்தார். ஏ.பாலசுப்பிரமணியன் வரவேற்பு உரையாற்றினார். தொடர்ந்து போட்டி தேர்வுக்கான பயிற்சி ஆசிரியர் கே.கணேசன் பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.  மையத்தின் நிர்வாகிகள் சேகரன், ஜி.கோபி, கணேஷ் குமார், அர்த்தநாரி, சாரதி ஆகியோர் பங்கேற்று கருத் துரை வழங்கினார்கள். தொடர்ந்து பயிற்சி வகுப்பின் ஆசிரி யர்களை அறிமுகப்படுத்தி வைத்தனர். இறுதியாக அம் பேத்கர் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் மே. கணேஷ்  பாண்டியன் நன்றி கூறினார். இவ்வகுப்பில் 76 மாணவ, மாணவிகள் கலந்து  கொண்டனர். இந்த மையத்தின் சார்பில் குரூப் 2 முதல் நிலை தேர்வில் இதுவரை 20 பேர் 200  மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்ன தாக டி.எம்.காளியண்ணகவுண்டரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு மையத்தின் நிர்வாகிகள், மாணவ, மாணவிகள் அவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.