நாமக்கல், ஜன.28- குமாரபாளையத்தில் கனரக வாகனங்களின் உதிரி பாகங்கள் கண்காட்சி நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் - சங்ககிரி சாலையில், பச்சாம்பாளையம் பகுதியில் தனியார் தொழில் நிறுவனத்தின் சார்பில், கனரக லாரிகள், ரிக் வண்டிகள், சொகுசு பேருந்துகள் உள்ளிட்ட கனகர வாகனங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் விற் பனை செய்யும் நிலையம் மற்றும் உதிரி பாகங்கள் கண்காட்சி நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது. இந்நிகழ் வில் பல்வேறு பகுதிகளில் கனரக வாகனங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் காட்சிப்படுத்தப்பட்டி ருந்ததை ஏராளமான வாடிக்கையாளர்கள் பார்வை யிட்டனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் வண்ணமய மான பலூன்களை ஒரே நேரத்தில் வானத்தில் பலூனை பறக்க விட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.