districts

திடக் கழிவு மேலாண்மை விழிப்புணர்வு பேரணி

அறந்தாங்கி, ஆக.28- நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் தஞ்சாவூர் உத்தரவின்படி அறந்தாங்கி நகராட்சி ஆணையர் மற்றும் சுகாதார அலுவலர் அறிவுரையின்படி நகராட்சி எல்லைக்குள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் முன்மாதிரி வார்டுகளாக தேர்வு செய்யப்பட்ட வார்டு 2,6,7,10,13,17,26 தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. புதனன்று நகராட்சி டிஇஎல்சி நடுநிலைப்பள்ளி, மாடன் ஐடிஐ, மாடன் நர்சிங் காலேஜ்,  கேம்பிரிட்ஜ் கேட்டரிங் காலேஜ் மாணவ-மாணவிகள் மற்றும் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், சுகாதார அலுவலர் டி.முத்துகணேஷ், சுகாதார ஆய்வாளர் எஸ்.சேகர், சமூக ஆர்வலர்கள் மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், டெங்கு ஒழிப்பு பணியாளர்கள், நகராட்சி ஆணையர் ஆர்.வினோத் முன்னிலையில் காவல் துணை கண்காணிப்பாளர் கோகிலா பேரணியை துவக்கி வைத்தார்.