திருப்பூர், செப். 4- பல்லடம் ஒன்றியம், மாணிக்காபுரம் ஊராட்சி பகுதியில் அரசு பேருந்து வசதி வேண்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சேர்ந்து கையெழுத்து இயக்கம் நடத்தினர். மாணிக்காபுரம் ஊராட்சி முழுவதும் உள்ள 2000க்கும் மேற்பட்ட குடும்பங்களை சந்தித்து மக்கள் கையெ ழுத்து இயக்கம் நடைபெற்றது. மாணிக்காபுரம், ராசா கவுண்டம்பாளையம், கருப்பண்ணசாமி நகர் உள்ளிட்ட பகுதி களில் இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. வாலிபர் சங்கர் கிளை தலைவர் செ.கிருஷ்ணகுமார், செயலாளர் செ. முருகேஷ் உட்பட வாலிபர், மாணவர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஊராட்சி முழுவதும் பெற்ற கையெழுத்துக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள, மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனுவாக கொடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.