திருப்பூர், ஜன.10- அவிநாசி அருகே கணியாம்பூண்டியில் கழிவுநீர் கால்வாயை தனிநபர் ஒருவர் அடைத்ததால், சாலையில் கழி வுநீர் குளம்போல தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொது மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: கணியாம் பூண்டி ஊராட்சியில் கணியாம்பூண்டியில் இருந்து திருப்பூர் செல்லும் முக்கிய சாலையில் தினம்தோறும் ஆயிரக் கணக்கானோர் வந்து செல்வதற்கு பயண்படுத்துகின்றனர். சாலையை ஒட்டிய பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனா். மேலும், சாலை அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் அரசுப் பள்ளி ஆகியவை உள்ளது. இந்நிலையில், இச்சாலையை ஒட்டியுள்ள கழிவுநீர் கால்வாயை தனிநபா் அடைத்து வைத்ததால், திருப்பூர் முக் கிய சாலையில் கழிவுநீர்குளம்போல தேங்கியுள்ளது. இத னால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், பள்ளி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்ற னர். மேலும் அதிக துா்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகி வரு கின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தினரிடம் பலமுறை தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக் கவில்லை. ஆகவே உடனடியாக ஊராட்சி நிர்வாகம் நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.