நாமக்கல், ஜூலை 3- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் வி.ராம சாமி நூற்றாண்டு விழா ஏற்பாடுகளை மார்க்சிஸ்ட் கட்சியினர் தீவிரப்படுத்தியுள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தோழரும், சுதந்திரப் போராட்ட தியாகி யும், திருச்செங்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரு மான மறைந்த தோழர் மோளிப்பள்ளி வி இராமசாமி அவர்க ளின், நூற்றாண்டு விழா மலர் வெளியீட்டு விழா நிகழ்ச்சி இம்மாதம் திருச்செங்கோட்டில் நடைபெற உள்ளது. இதனை யொட்டி, விழா மலர் விளம்பரம் மற்றும் நிதி சேகரிப்பு பணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உற்சாகமாக பணியாற்றி வருகின்றனர். இதன்தொடர்ச்சியாக, குமாரபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் என்.சக்திவேல் தலை மையில், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.முத்து கண்ணன், கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, நாமக்கல் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன், மாவட்டக் குழு உறுப்பினர் எம்.ஆர் முருகேசன், கட்சியின் முன் னாள் நகரச் செயலாளர் எஸ்.ஆறுமுகம் மற்றும் நகரக் குழு உறுப்பினர்கள் ஆகியோர், குமாரபாளையத்தில் முகாமிட்டு அழைப்பிதல் கொடுக்கும் பணிகள் உள்ளிட்டு நூற்றாண்டு விழாப் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.