திருப்பூர், செப்.7- திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் வட்டாரத்தில் உலக தென்னை தினத் தினை முன்னிட்டு கருத்தரங்கம் நடை பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2 ஆம் தேதி உலக தென்னை தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன் னிட்டு குடிமங்கலத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் வேளாண் உதவி இயக்குனர் வசந்தா பேசுகையில், குடி மங்கலம் வட்டாரத்தில் நிகர சாகுபடி பரப்பான, 22 ஆயிரம் ஹெக்டர் பரப்பள வில், 13 ஆயிரம் ஹெக்டர் பரப்பள வில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள் ளது. தென்னை, வட்டார விவசாயிக ளுக்கு வாழ்வாதார பயிராக உள்ளது. நிரந்தர பயிரை சிறப்பாக பராமரிக்க நவீன தொழில்நுட்பங்களை பயன் படுத்த வேண்டும் என்றார். மேலும் வட்டார வேளாண் விரிவாக்க மைத் தில் மானிய விலையில் இருப்பிலுள்ள, தென்னை, பருத்தி, பயறு வகை மற்றும் தானிய வகை உரங்கள் , மக்காச்சோ ளம், கம்பு, உளுந்து, பாசிபயறு, கொண் டைக்கடலை, நிலக்கடலை விதை இருப்பு குறித்தும், வேளாண் துறை சார்பில் செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்கள் குறித்து பேசினார்.
பொங்கலூர் அறிவியல் மைய பேரா சிரியர் கலையரசன், தென்னையில் தோன்றும் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் முறைகள், வருவாய் அதிகரிக்க தென்னந்தோப்புக்குள் தேனீ வளர்ப்பு முறைகள் குறித்து விளக்கினார். மாவட்ட வேளாண் துணை இயக்கு னர் சுருளியப்பன், தென்னையில் ஊடு பயிராக மகா கனி, மிளகு ஆகியவற்றை சாகுபடி செய்து வருமானத்தை பெருக் கலாம் என்றார். முன்னாள் வேளாண் உதவி இயக்கு னர் மகாலிங்கம், தென்னை மரத்திற்கு இட வேண்டிய பேரூட்டம், நுண்ணுாட்ட உரங்களின் அளவு மற்றும் பயன்படுத் தும் முறைகள் குறித்தும், தென்னந் தோப்புக்குள் பசுந்தாள் உரமாக பயன் படும் தக்கை பூண்டு பயிரிட்டு பூக்கும் பருவத்தில் மடக்கி உழுவதால் மண் ணில் அங்கக சத்தின் அளவு அதிகமா வதோடு களையும் கட்டுப்படுத்தப்படும் என்றார். கருத்தரங்கினை முன்னிட்டு அலுவ லக வளாகத்தில், தென்னை சார் பொருட்களைக்கொண்டு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.