வீடு தேடிச்சென்று மரக்கன்றுகள் நடும்
அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு!
நாமக்கல், ஜூன் 13- குமாரபாளையத்தில் வீடு தேடிச்சென்று மரக்கன்றுகள் நடும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில செயல்பட்டு வரும் தன்னார்வ சேவை அமைப்பின் மூலம், வீடு தேடிச் சென்று மரக்கன்றுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சேவை அமைப்பின் நிர்வாகிகள் சீனிவாசன், பிரபு ஆகியோர் மரக்கன்றுகளை கேட்போரின் வீட்டிற்கு நேரடியாக சென்று, அவர்கள் சொல் லும் இடத்தில் மரக்கன்றுகளை நட்டு வைக்கின்றனர். இந்த கன்றுகளை சிறப்பாக பராமரித்து மரமாக்குவோர்களுக்கு பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, புதனன்று கோட்டைமேடு அம்மன் கோவில் பகுதி யில் மரக்கன்றுகளை நட விருப்பப்பட்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் வீடுகளை தேடிச்சென்று மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. பின்னர் பள்ளி குழந்தைகளுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியயை முருகேஸ்வரி, தன்னார்வ அமைப்பின் நிர்வாகி கள் சரண்யா, பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வீடு தேடிச்சென்று மரக்கன்றுகள் நடவு செய்துவரும் தன்னார்வ அமைப்பிற்கும், அரசு பள்ளி மாணவர்களுக்கும் பாராட்டு கள் குவிந்து வருகின்றன.
தேவையின்றி ரயில் அலார சங்கிலியை இழுத்த 80 பேர் மீது வழக்கு
சேலம், ஜூன் 13- சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில், தேவையின்றி அலார சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத் திய 80 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய் துள்ளனர்.
ஓடும் ரயிலில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தாலோ, தீ விபத்து போன்ற சம்பவங்கள் நடந்தாலோ, உடனடியாக ரயிலை நிறுத்த அலார சங்கிலியை பயணிகள் பயன் படுத்தும் வசதி உள்ளது. இதன்படி, ஆங்காங்கே பயணி கள் அலார சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி, ரயில்வே காவல் துறையினர் மற்றும் அதிகாரிகளின் உதவியை பெற்று வருகின்றனர். சில ஆண்டுகளாக தேவையின்றி ரயில் அலார சங்கிலியை இழுத்து ரயிலை நடு வழியில் நிறுத்தும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த செயல்களில் ஈடுபடுவோர் மீது ரயில்வே காவல் துறையினர் நடவ டிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி, சேலம் ரயில்வே கோட்டத்திற்குபட்ட சேலம், கோவை, கரூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த ஐந்து மாதங்களில் தேவை யின்றி அலார சங்கிலியை இழுத்ததாக 80 பேர் மீது ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள னர்.
பயணிகள் விமானத்தில் 5 டன் சரக்குகள்
கோவை, ஜூன் 13- உயர் அதிகாரிகளின் கூட்டு முயற்சியில் பயணிகள் விமானத்தில் 5 டன் சரக்குகள் ஏற்றப்பட்டுள்ளது.
கோவையில் இருந்து ஷார்ஜா, சிங்கப்பூர் என இரண்டு வெளிநாடுகளுக்கு மட்டுமே விமான சேவை வழங்கப்படு கிறது. இத்தகைய விமானங்களில் ஒவ்வொரு முறையும் 168 பயணிகள் வரை பயணிப்பது வழக்கம். சில நாட்கள் பயணி களின் இருக்கைகள் குறைவாக பதிவேற்றம் செய்யப்படும். அதுபோன்ற நேரங்களில் சரக்குகள் சற்று கூடுதலாக ஏற்ற வாய்ப்பு கிடைக்கும். இந்நிலையில், கோவை விமான நிலை யத்தில் கடந்த ஜூன் 7 ஆம் தேதியன்று காலை ஷார்ஜா புறப் பட்ட விமானத்தில் 168 பயணிகளுக்கு பதில் 100 பேர் மட்டுமே சென்றனர். இதனால், பயணிகளின் உடைமைகள்வைக்கும் பகுதியில் இடவாய்ப்பு சற்று அதிகம் கிடைத்தது. உடனடியாக அந்நிறுவனத்தின் அதிகாரிகள், ஊழியர்கள் அதிக சரக்கு களை ஏற்ற திட்டமிட்டனர். அன்றைய தினம் ஜவுளிப் பொருட் கள் மற்றும் தொழில் துறையில் பயன்படுத்தப்படும். பொருட் கள் ஏற்றுமதிக்காக ஷார்ஜாவுக்கு புக்கிங் செய்யப்பட்டு இருந்தன. வழக்கமாக 3.5 டன் வரை மட்டுமே ஏற்றப்படும். இந்த நிலையிலே, 5 டன் வரை சரக்குகள் அந்த விமானத்தில் ஏற்றப்பட்டன.
கோவை விமான நிலையத்தில் மாதந்தோறும் உள்நாட்டு பிரிவில் 150 டன், வெளிநாட்டு பிரிவில் 850 டன் வரை என மாதந்தோறும் சராசரியாக 980 டன் வரை சரக்குகள் கையா ளப்பட்டு வருகின்றன. இதில், காய்கறிகள், ஜவுளிப் பொருட் கள், வார்ப்படம், வால்வு உள்ளிட்ட இன்ஜினியரிங் பொருட் கள் ஏற்றுமதி செய்யப்படும். கடந்த மார்ச் மாதம் மட்டும் உள் நாடு மற்றும் வெளிநாடு போக்குவரத்து சேர்த்து 1,000 டன்னுக்கு அதிகமாக சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.