districts

img

உதகை தாவரவியல் பூங்காவில் இரண்டாம் பருவ நடவுப்பணிகள் துவக்கம்

உதகை, ஜூலை 17- உதகை தாவரவியல் பூங்காவில் இரண்டாம் பருவ மலர்க்கண்காட்சிக் கான நடவுப்பணிகள் திங்களன்று துவங்கப்பட்டது.  நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் இரண்டாம் பருவமானது செப்டம்பர் மாதத்தில் துவங்கும். அந்தவகையில், உதகை அரசு தாவர வியல் பூங்காவில் இவ்வாண்டு இரண் டாம் பருவ மலர்க்கண்காட்சிக்கான செடிகள் நடவுப்பணிகளை நீலகிரி மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் திங்க ளன்று துவக்கி வைத்தார். இம்மலர்க் கண்காட்சிக்காக, நாட்டின் பிற மாநி லங்களான கொல்கத்தா, காஷ்மீர், பஞ்சாப், புனே, பெங்களுரு போன்ற இடங்களிலிருந்து இன்கா மேரி  கோல்டு, பிரெஞ்ச்மேரி கோல்டு, ஆஸ் டர், வெர்பினா, ஜூபின், கேண்டிடப்ட், காஸ்மஸ், சகூபியா, பாப்பி, ஸ்வீட் வில்லியம், அஜிரேட்டம், கிரைசாந்தி மம், கேலண்டுலா, ஹெலிக்ரைசம், சப்பனேரியா, பெடுனியா போன்ற 60 வகைகளில் பல்வேறு வகையான விதைகள் பெறப்பட்டுள்ளன. மேலும், பூங்காவிலேயே விதைகள் உற்பத்தி செய்யப்பட்டும் சுமார் 4 லட்சம்  மலர்ச்செடிகள் இரண்டாவது பருவ மலர்க்கண்காட்சிக்காக பாத்திக ளில் நடவு செய்யப்பட உள்ளன. மேலும், 15 ஆயிரம் மலர்த் தொட்டிகளில் சால்வியா, டெய்சி,  டெல்பினியம், டேலியா, கேலா லில்லி, ஆந்தூரியம் போன்ற 30 வகையான மலர்ச்செடிகள் நடவுப்பணியும் துவக்கி வைக்கப்பட்டது. இம்மலர்த் தொட்டிகள் காட்சித்திடலில் அடுக்கி வைக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் கண்க ளுக்கு விருந்தாக ஒரு மாத காலம் வரை திறந்து வைக்கப்பட உள்ளது. இவ்வாண்டு இரண்டாம் பருவ மலர்க் கண்காட்சி செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் துவங்கப்படவுள்ளது. இவ் வருடம் சுமார் 3 லட்சம் சுற்றுலா பய ணிகள், பொதுமக்கள் செப்டம்பர் மற் றும் அக்டோபர் மாதங்களில் வருகை  புரிவார்கள் என எதிர்பார்க்கப்படு கிறது.