கோவை, டிச. 25- செங்கொடியை கையில் ஏந்தி, நீதி கேட்ட போராட்டத்தில், உயிர் நீத்த தஞ்சைத்தியாகிகளின் தியா கத்தை உறுதியேற்கும் கீழ் வெண் மணி நினைவு தினம் மாநிலம் முழுவதும் பரவலாக அனுசரிக்கப் பட்டது. நாகை மாவட்டம், கீழ்வே ளூர் அருகே உள்ள கீழ்வெண்மணி கிராமத்தில், கூலி உயர்வு கேட்டு, செங்கொடி ஏந்தி நடந்த போராட் டத்தில், ஆண்டையர்களின் ஆதிக்க வெறியால் டிசம்பர் 25 ஆம் தேதி தீயில் வெந்தனர் வெண்மணி தியாகிகள். இத்தியாகிகளுக்கு வீரவணக்கத்தை ஆண்டுதோறும் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் விவசா யிகள், உழைப்பாளிகள் அனுச ரித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்க ளில் வெண்மணி தியாகிகள் நினைவுதினம் அனுசரிக்கப்பட் டது. பொள்ளாச்சி, கிணத்துகடவு மற்றும் ஆனைமலை உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் வெண்மனி தியாகிகளின் நினைவை போற்றும் வகையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. விவசாய சங்கங்களின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் வி.ஆர்.பழனிசாமி, விவ சாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.துரைசாமி, மாவட் டப் பொருளாளர் கே. மகாலிங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஜெகநாதன், அரசு போக்குவரத்து கழக பொதுச் செயலாளர் பரமசிவம், குடிநீர் வடி கால் வாரியம் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சரவணன், ஆனைமலை மார்க்சிஸ்ட் கட்சி யின் தாலுகாச் செயலாளர் வி.எஸ். பரமசிவம், விவசாய சங்க மாவட் டக் குழு உறுப்பினர் அப்பாவு உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். தருமபுரி இதேபோன்று, தருமபுரி மாவட் டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள சந்தனூரில் வெண்மணி நினைவு தின கொடியேற்று விழா வுக்கு தீர்த்தகிரி தலைமை வகித் தார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட் டச் செயலாளர் ஏ.குமார், தமிழ் நாடு விவசாயிகள் சங்க வட்டத் தலைவர் கணேசன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வட்டச் செயலாளர் குப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சேலம் சேலம் மாவட்டம், மேட்டூரில் வட்டார சிஐடியு சங்கம் சார்பி லும், ஆத்தூரில் விடுதலைச் சிறுத் தைகள் கட்சி சார்பிலும் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்டனர்.