சேலம், அக்.29- சேலம்-கோவை ரயில் ஒரு மாத காலத்திற்கு ரத்து செய் யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித் துள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட காவேரி-ஈரோடு மார்க்கத்தில் தண்டவாள பராமரிப்பு பணி நடக்கிறது. இத னால், இவ்வழித் தடத்தில் இயங்கும் சில ரயில்கள் இயக் கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, கோவை-சேலம் ரயில் (06802), மறுமார்க்கத்தில் இயங்கும் சேலம்-கோவை ரயில் (06803) ஆகிய இரு ரயில்களும் வரும் 31ம் தேதி முதல் நவம்பர் 29ம் தேதி வரை ஒரு மாத காலத் திற்கு ரத்து செய்யப்படுகிறது. இத்தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.