districts

img

ஈரோட்டில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் தர்ணா

ஈரோடு, செப். 22- தமிழ்நாடு ஊரக வளர்ச்த் துறை அலுவலர்கள் சங்கத் தினர் ஈரோடு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதனன்று தர்ணாவில் ஈடுபட்டனர்.  ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை நிர்வாகம் ஊரக  வளர்ச்சித் துறை அலுவலர்கள் மற்றும் ஊழியா்களுக்கு எதிராக செயல்படுகிறது. இதனால் ஊராட்சி செயலர் முதல்  வட்டார வளர்ச்சி அலுவலர் வரையிலான அலுவலர்கள் கடும்  பணி நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர். தேவையின்றி பிற துறை பணிகளுடன் ஊரக வளர்ச்சித் துறை பணியாளர் களை இணைத்தல், விடுமுறை மற்றும் இரவு நேரங்களில் கூட்டம், வலைதள கூட்டங்கள், கணக்கெடுப்பு ஆகிய வற்றை நடத்த வலியுறுத்தப்படுகிறது. இதனால் ஊரக  வளா்ச்சித்துறையில் உள்ள எந்தப் பணியையும் முழுமை யாகவும், சரியாகவும் நிறைவேற்ற இயலவில்லை. எனவே, இதனைக் கண்டித்தும், கைவிடக் கோரியும்  கடந்த 19ஆம் தேதி முதல் மாலை 5.30 மணிக்கு மேல் பணி செய்வதில்லை எனும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், வியாழனன்று மாலை ஒரு மணி நேரத்திற்கு முன்ன தாக மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.  மாவட்ட தலைவர் பா.ரவிச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநில துணை தலைவர் ஜெ. பாஸ்கர்பாபு சிறப்புரையாற்றினார். இதில் 50க்கும் மேற் பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதேபோல 14 வட்டாரங்களிலும் மாலை 4.45 மணிக்கு வெளிநடப்பு செய்த  அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

;