சேலம், டிச.5- சேலம் மாநகரம் அஸ்தம்பட்டி பகுதி முதல் மத்திய சிறைச் சாலை வரை உள்ள பாதையோர கடைகளை நெடுஞ்சாலைத்துறை யினர் அப்புறப்படுத்த வந்ததை தொடர்ந்து பாதையோர வியா பாரிகள் மறியலில் ஈடுபட முயன் றதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாநகரம் அஸ்தம்பட்டி முதல் மத்திய சிறைச்சாலை வரை எண்ணற்ற சிறு கடைகள் செயல்பட்டு வருகிறது. அதனை நம்பி 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் வாழ் வாதாரத்தை பூர்த்தி செய்து வரு கின்றனர். இவர்கள், மாநகராட் சியில் உரிய அனுமதி பெற்று பாதையோர வியாபாரம் செய் பவர்கள் என அடையாள அட்டை வைத்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சிறு கடைகளை நடத்தி வருகின்றனர். இச்சூழலில் தற்போது அங்கு போக்குவரத்து நெரிசல் அதிக மாக ஏற்படுவதாக நெடுஞ்சாலை துறையினர் குற்றம்சாட்டி, உடன டியாக பாதையோர கடைகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கி யுள்ளனர். இதன் ஒரு பகுதியாக சனி யன்று காலை அஸ்தம்பட்டி பகுதியில் நெடுஞ்சாலைத்துறை துணை இயக்குனர் சந்தோஷ் தலைமையில் அதிகாரிகள் பாதையோர கடைகளை அப் புறப்படுத்த வந்தனர்.
இதனை தொடர்ந்து, பாதையோர வியா பாரிகள் ஏற்காடு நெடுஞ்சாலை யில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். தகவ லறிந்த அஸ்தம்பட்டி காவல் துறை யினர், காவல் துணை ஆணையா ளர் தலைமையில் பாதுகாப்புக் காக வந்தனர். அதன் பின்பு நடை பெற்ற பேச்சுவார்த்தையில் மாவட்ட ஆட்சியரிடம் பேசிய பின்பு மீண்டும் கடையை வைத் துக் கொள்கிறோம் என சிஐடியு பாதையோர வியாபாரிகள் சங்கத் தினர் தெரிவித்தனர். இதனைய டுத்து நெடுஞ்சாலைத் துறையின ரும் கலைந்து சென்றனர். இதன் பின் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்திற்கு திரண்டு சென்ற பாதை யோர வியாபாரிகள், தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித் தனர். இதுகுறித்து சிஐடியு பாதை யோர வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் தனசேகர் தெரிவிக் கையில், சேலம் மாநகராட்சி வியா பாரிகள் சட்டத்தின் அடிப்படை யில் இங்கு கடைகள் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 20 ஆண்டுக ளுக்கு மேலாக இங்கு உள்ளவர் கள் கடைகளை நடத்தி வருகி றார்கள். போக்குவரத்திற்கு இடை யூறு இல்லாமல் இங்கு வியாபா ரம் நடைபெறுகிறது. இந்நிலை யில், திட்டமிட்டு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கடைகளை காலி செய்ய வற்புறுத்தி வருகின்ற னர். மாவட்ட நிர்வாகமும், மாவட்ட ஆட்சியரும் உடனடியாக இப்பிரச் சனையில் தலையீடு செய்து பாதையோர வியாபாரிகள் தொடர்ந்து அஸ்தம்பட்டி பகுதி யில் கடைகளை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவித் தார். இதில் சிஐடியு தொழிற்சங்க மாவட்ட நிர்வாகி விஜயலட்சுமி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வியாபாரிகள் பங்கேற்றனர்.