பொள்ளாச்சி, ஜூன் 18- பொள்ளாச்சி அந்தியூர் இணைப்பு சாலை யில் அரைகுறையாய் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்வது பொதுமக்க ளிடையே அதிர்ப்த்தியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட் டத்தில் கூளநாயக்கன்பட்டி அந்தியூர் இணைப்பு சாலையில் சிப்காட் நிலத்தில் அமைய உள்ள விவிடி நிறுவன தொழிற் சாலைக்கு அந்தியூரில் இருந்து விவிடி சிப் காட் நிலம் வரை சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. சாலையின் குறுக்கே மின் கம்பத்தில் இருந்து வரும் விசை கம்பியை அகற்றாமல் அரைகுறையாக சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இத னால், இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. வாகன ஓட்டிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்த கம்பியினை அகற்றி சாலை விரிவாக்கப் பணிகளை முழு மையாக முடிக்க வேண்டும் என அப்பகுதி யினர் வலியுறுத்தி உள்ளனர்.