கோவை, டிச. 15- மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு உருப்படியான நடவடிக்கை எடுக்கக்கோரி கோவையில் சிறு, குறு தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூலப்பொருட்கள் விலை உயர்வினால் தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளன. இந்த விலை உயர்வை கட் டுப்படுத்த மத்திய அரசு உடன டியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, மூலப் பொருட்கள் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும்.
மூலப்பொருட் கள் இறக்குமதி மீதான வரிகளை குறைக்க வேண்டும். விலை உயர்வை கட்டுப்படுத்த கண் காணிப்பு குழு அமைக்க வேண் டும். குறுந்தொழில் முனை வோருக்கு தனிக்கடன் திட்டத்தை அறிவிக்க வேண்டும். கோவையில் மூடப்பட்டுள்ள மூலப்பொருட்கள் சேமிப்பு கிடங் கான செயில் கிடங்கை திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி கோவை தெற்கு வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு செவ்வா யன்று கோவை சிறு, குறு தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் (போசியா) ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத் திற்கு டேக்ட் அமைப்பின் தலை வர் ஜேம்ஸ் தலைமை வகித்தார். இதில், வெட் கிரைண்டர், மோட் டார் பம்புகளுடன் ஐநூறுக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் முனைவோர்கள் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப் பினர்.