தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட தலைவர் சேவை. அங்கப்பன் தலைமையில் சேலம் ஒய்எம்சிஏ அரங்கத்தில் ஓய்வூதியர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில், மாநில பொதுச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் சி.ராஜ்குமார், அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ஏ.சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.