districts

img

அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாக பிரிக்க ஒன்றியக் கவுன்சிலர்கள் அவசரக் கூட்டத்தில் தீர்மானம்

அவிநாசி, ஜன.3- அவிநாசியில் வெள்ளியன்று நடைபெற்ற ஊராட்சி ஒன்றியக் கவுன் சிலர்கள் அவசரக் கூட்டத்தில், ஊராட் சி ஒன்றியத்தை இரண்டாகப் பிரிக்க  வேண்டும் என தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. அவிநாசி ஊராட்சி ஒன்றியக்  கவுன்சிலர்கள் கூட்டம் பொறுப்பு  சேர்மன் பிரசாந்த் தலைமையில்  வெள்ளியன்று நடைபெற்றது.  இதில், அவிநாசியில் 31 ஊராட் சிகள் செயல்பட்டு வருகின்றன. 1986  ஆம் ஆண்டு   பொங்கலூர், ஆலத் தூர், கானூர், மங்கரசோலைபாளை யம், தண்டுகாரம்பாளையம், முறி யாண்டபாளையம், குட்டகம், போத் தம்பாளையம், பாப்பாங்குளம், சேவூர், புலிப்பார், தத்தனூர், புஞ்சை  தாமரைக் குளம், வடுகபாளையம் உள்ளிட்ட 14 ஊராட்சிகளை  இணைத்து சேவூரை தலைமையி டமாக கொண்ட ஊராட்சி ஒன்றிய மாக அறிவிக்க கோரி தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது. இதை பொறுப்பு சேர்மன் பிரசாந்த் மீண்டும்  தீர்மானமாக வெள்ளியன்று முன் வைத்தார்.  இதைதொடர்ந்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் கவுன்சிலர் முத்துசாமி, 86  காலகட்டத்தில் அவிநாசி பரந்து  விரிந்த தாலுகாவாக இருந்து வந்தது.  அப்பொழுதே இரண்டாக பிரிக்க வேண்டும் என ஊராட்சி மன்றத் தலை வர்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு கவுன்சிலர்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர். மீண்டும் இந்தத் தீர்மானம் முன்வைக்கப்பட்டதை வரவேற்கின்றேன். மேலும் புதுப்பா ளையம் ஊராட்சியில் இரண்டு கிராம  நிர்வாக அலுவலர்கள் செயல்பட்டு  வருகின்றனர். இந்த ஊராட்சியை யும் இரண்டாக பிரிக்க வேண்டும் என  தெரிவித்தார். இந்த தீர்மானத்தை பங்கேற்ற அனைத்து கவுன்சிலர்களும் வர வேற்றனர். இதையடுத்து, கவுன்சிலர் சேது மாதவன் பேசுகையில், முன்வைத்த தீர்மானத்தை  வரவேற்கின்றேன், அதேபோல் பழங்கரை ஊராட்சியை இரண்டாக பிரிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கூறினார். இதையடுத்து கவுன்சிலர் அய் யாவு பேசுகையில், குப்பாண்டபா ளையம் மேல்நிலை தொட்டிக்கு டெண்டர் விடப்பட்டு, பல நாட்கள் ஆகியும் பணிகள் தொடங்கவில்லை. அதேபோல் துலுக்கமுத்தூர் சாலையில் நெடுஞ்சாலை ஓரம்  புதர் மண்டி கிடக்கிறது. இதை அப்பு றப்படுத்த வேண்டும் என்று நான்கு முறை கடிதம் அளித்தும் எந்த நடவ டிக்கையும் இல்லை என தெரிவித் தார். இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற தீர்மானம் குறித்து மாவட்ட  ஆட்சியர் கூட்டத்தில் பற்றி பேசப் பட்டுள்ளது என வட்டார வளர்ச்சி  அலுவலர் விஜயகுமார் தெரிவித் தார்.