சேலம், டிச.20- நூறுநாள் வேலையை பேரூராட்சி பகுதிக்கும் விரிவுபடுத்த வேண்டும் என மார்க் சிஸ்ட் கட்சியின் கெங்க வல்லி தாலுகா மாநாட் டில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கெங்கவல்லி தாலுகா 7வது மாநாடு கடம்பூரில் தோழர் ஜி.பி.ராஜ கோபால் நினைவரங்கத்தில் நடைபெற்றது. கட்சியின் செங்கொடியை எம்.குமரன் ஏற்றி வைத்தார். மாநாட்டை துவக்கி வைத்து மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி உரையாற்றினார். வேலை அறிக் கையை தாலுகா செயலாளர் ஜெ.ஜோதி குமார் முன்வைத்தார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஏ.முருகேசன், வி.கே.வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில், தம்மம்பட்டியில் அரசு கலைக்கல்லூரி துவங்க வேண் டும். நூறுநாள் வேலை திட்டத்தை பேரூராட்சி பகுதிக் கும் விரிவுபடுத்தி, வேலை நாட்களை 200 ஆக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து இம்மாநாட்டில் கெங்கவல்லி தாலுகா செயலாளராக ஆர்.வெங்கடாசலம் உட்பட 7 பேர் கொண்ட தாலுகா குழு தேர்வு செய்யப்பட் டது.