districts

img

சமீபத்தில் போடப்பட்ட சாலை மழையால் சேதம்: உடனடியாக சீரமைக்க சிபிஎம் கோரிக்கை

திருப்பூர், மே 17- நெருப்பரிச்சல் பகுதியில் மாநில  நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிதாக போடப்பட்ட சாலை வெள்ளியன்று பெய்த மழையில் சேதமடைந்துள்ளது. அதை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.  திருப்பூர் கோட்டம் நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளரிடம் மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப் பினர் ஆ.சிகாமணி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,  திருப்பூர் வடக்கு தாலுகா, திருப்பூர் மாநகராட்சி இரண் டாவது மண்டலம், பூலுவபட்டி முதல்  வாவிபாளையம் வரை சாலை விரி வாக்க பணியின் மூலம் புதிய சாலை  அமைக்கப்பட்டது. இதன் ஒரு பகுதி யாக, நெருப்பரிச்சல் வாவிபாளையம் இடையே கொங்கு திருமண மண்டபம்  அருகில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு  புதிதாக சாலை விரிவாக்க பணி மூலம் தார் சாலை போடப்பட்டது. இந்நி லையில், வெள்ளியன்று பெய்த மழை யில், ஒரே மாதத்தில் புதிதாக போடப் பட்ட சாலை சேதமடைந்துள்ளது. இத னால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்படும் அபாயம்  உள்ளது. மேலும், பாதாள சாக்கடை  தொட்டியிலிருந்து கழிவு நீர் வெளி யேறிக்கொண்டு மேலே வருவதால், இதனை உடனடியாக சரி செய்திட நட வடிக்கை எடுக்க வேண்டும் என, கூறப் பட்டுள்ளது.