districts

img

கழிவுநீர் கால்வாயை சீரமைத்து சாலை செப்பனிடும் பணியை துவக்கிடுக

தருமபுரி, ஆக.11- தருமபுரி நகராட்சிக் குட்பட்ட 30ஆவது வார்டு  மதுராபாய் மண்டபம் பின் புறம் கழிவுநீர் கால்வாயை சீரமைத்த பின்னர் சாலை  செப்பனிடுமாறு பொது மக்கள் வலியுறுத்தியுள் ளனர். தருமபுரி நகராட்சிக்குட்பட்ட 30ஆவது வார்டு மதுராபாய் மண்டபம் பின்புறம் சாலை  செப்பனிடும் பணிகள் நடைபெற்று வரு கிறது. மதுராபாய் மண்டபத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் அப்பகுதிக்கு பின்புறத்தில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாய் வழியாக சனத்குமார் நதியில் கலக்கிறது. கழிவுநீர் கால்வாய் கடந்த இரண்டு ஆண்டுகளாக உடைந்தும், கழிவுகள் தேங்கியும் அடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், மழை காலங்களில் தண்ணீர் சாலையில் வழிந்து செல்கிறது.  எனவே, கழிவுநீர் கால்வாயை சீர மைத்து, சாலையை செப்பனிடுமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.