districts

img

உடுமலை சுற்றுலாப் பயணிகளை கவரும் முதலை பண்ணையில் புணரமைப்புப் பணிகள்

திருப்பூர், மே 29- உடுமலையில் 49 ஆண்டுகளாக வனத் துறையால் பராமரிக்கப்பட்டு வரும் முதலை பண்ணையில் புணர மைப்புப் பணிகள் நடைபெற்று வருகி றது. இதை மாவட்ட சுற்றுலா அலுவலர்  ஆய்வு மேற்கொண்டார். சதுப்பு நில முதலைகள் ஆசியாவில்  அழிந்து வரும் இனமாக கருதப்படுகி றது. இந்த இனத்தைப் பாதுகாக்கும் நோக்கில் உலக அளவில் பல்வேறு நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. இந்நிலையில், திருப்பூர் மாவட் டம் உடுமலை அருகே உள்ள அமராவதி  அணைப் பகுதியில் 12 ஏக்கர் பரப்பள வில் முதலைப் பண்ணை உள்ளது. இதை கடந்த 49 ஆண்டுகளாக வனத் துறையால் இது பராமரிக்கப்பட்டு வரு கிறது. இப்பண்ணையின் பொன்வி ழாயை ஒட்டி கடந்த 2 ஆண்டுகளாக புன ரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின் றன. இப்பண்ணையில் ஆண், பெண் குட்டிகள் என சுமாா் 80 முதலைகள் பரா மரிக்கப்படுகின்றன. 13 வயது முதல் 48  வயது வரை உள்ள முதலைகள் வய துக்கேற்றவாறு 10 பிரிவுகளாக பிரிக்கப் பட்டு, தனித்தனி தண்ணீர் தொட்டிகளில் விடப்பட்டுள்ளன. முதலைகள் ஒன்றுக்கொன்று சண்டையிடுவதை தடுக்கும் வகையில் இவ்வாறு பிரித்து விடப்பட்டுள்ளன. மேலும் இதற்கு உணவாக தினமும் 35 கிலோ மாட்டு இறைச்சியும், 14 கிலோ மீன் துண்டுகளும் வழங்கப்படுகின்றன என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். அமராவதி அணை மற்றும் படகு சவாரி, சிறுவர் பூங்கா, சைனிக் பள்ளி  உள்ளிட்ட இடங்களை காண வரும் சுற் றுலாப் பயணிகள் இந்த முதலைப் பண் ணையையும் கண்டு செல்வது வழக்கம்.  இந்நிலையில், மாவட்ட சுற்றுலா அலுவலர் ஆர்.அரவிந்த்குமார் முத லைப் பண்ணையில் நடைபெற்று வரும்  புணரமைப்புப் பணிகளை செவ்வா யன்று பாா்வையிட்டார். அப்போது, முதலை பண்ணைக்கு சுற்றுலா வரும்  பயணிகளை மேலும் ஈர்க்கும் வகை யில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய திட்டத்தை தயார் செய்து சுற்று லாத் துறைக்கு சமா்ப்பிக்கும்படி வனத் துறையினருக்கு அறிவுறுத்தினார். மேலும், சுற்றுலாப் பயணிகளிடம் கலந்துரையாடினார். இதையடுத்து முதலை பண் ணைக்கு எதிரே அமைந்துள்ள அமரா வதி வனச் சரகத்துக்கு உட்பட்ட கரட்டு பதி சூழல் மேம்பாட்டுக் குழு நடத்தும்  சூழல் கடையில் ஆய்வு மேற்கொண் டார். வனக் காப்பாளர், மாவட்ட சுற்றுலா  வளர்ச்சி குழு நிர்வாகிகள் உடனிருந் தனர்.

;