கோபி, பிப்.24- கோபி அருகே வக்பு வாரியத்தில் தவறுதலாக பதிவேற்றம் செய்த வீட்டு மனைகள், விவசாய நிலங்கள் மீதான தடை நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல்வருக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள சவண்டப்பூர் ஊராட்சியில் 500க் கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், சவண்டப்பூரில் உள்ள கிராமமக்கள் வீட்டுமனைகள் மற்றும் விவசாய நிலங்கள் மீது கடனுதவி பெறவும், குடியிருப்புகளில் புதிதாக வீடுகட்டவும், பெயர் மாற்றம் செய்ய பத் திரப்பதிவு செய்ய சென்றபோது சவண் டப்பூர் ஊராட்சியில் உள்ள வீட்டுமனை கள், விவசாய நிலங்கள் வக்பு வாரிய சொத்துக்களாக பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளதை அறிந்தனர். இதனை யடுத்து ஊராட்சியில் உள்ள குடியிருப் புகள் மற்றும் விவசாய நிலங்கள் தவறு தலாக வக்புவாரியத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதை நீக்க வேண்டும் என கிராம மக்கள் நீண்ட நாட்களாக தமி ழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற் கும் மனுக்கள் மூலம் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து தவறுதலாக வக்பு வாரியத்தில் பதிவேற்றம் செய்துள்ளது குறித்து தமிழக அரசுக்கும் முதல்வ ரின் கவனத்திற்கு அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் கொண்டு சென்றார். இதனடிப்படையில் மாவட்ட நிர்வா கமும் வக்பு வாரியமும் சவண்டப்பூர் ஊராட்சியில் நேரில் உரிய ஆய்வு மேற் கொண்டதில் வக்புவாரியத்தில் தவறு தலாக பதிவேற்றம் செய்த புலங்களில் வீட்டுமனை, விவசாய நிலங்கள் மீதான தடையை நீக்கினர். பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறை வேற்றியதால் கிராம மக்கள் சார்பில் தமிழக முதல்வருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், வக்பு வாரியத்திற் கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி திங்க ளன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பொதுமக்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத் திற்கு கொண்டு சென்ற அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலத்தி டம் தமிழக அரசுக்கு நன்றி தெரி விப்பதாக பொதுமக்கள் நன்றி தெரிவித் தனர்.