districts

img

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு!

கோவை, ஜூன் 15- உலக குருதிக்கொடை நாளையொட்டி கோவையில் தலசீ மியா என்ற விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது.

கோவை சிரியன் சர்ச் சாலையில் உள்ள இந்திய மருத்துவ  சங்க அரங்கில் உலக குருதிக் கொடை நாள் வெள்ளியன்று  அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு இந்திய மருத்துவ  சங்கத்தின் துணைத் தலைவர் மருத்துவர் கோசல் ராம் வர வேற்புரை வழங்கினார். குருதிக் கொடையாளர் மகாலிங் கம் மனோகரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மருத்து வர் ரகு குருதிக்கொடை நாள் குறித்து விழிப்புணர்வு உரை  நிகழ்த்தினார். பிரதீப் கோகுல்தாஸ் மற்றும் அருண் கோகுல் தாஸ் தயாரிப்பில், இயக்குனர் கார்த்திக் ராம் இயக்கத்தில்  உருவான தலசீமியா என்ற குருதிக்கொடை குறித்த விழிப்பு ணர்வு குறும்படம் திரையிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு  விருந்தினராக பங்கேற்று குறும்படத்தை பார்வையிட்ட  மாநகர சுகாதார அலுவலர் மருத்துவர் கே.பூபதி உரையாற்றி னார். 

இந்த நிகழ்வில் தலசீமியா குறும்படத்தில் நடித்த நடிகர்,  நடிகையர் மற்றும் மருத்துவ ஊழியர்கள் என திரளானோர்  கலந்து கொண்டனர்.

மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை மனு

பொள்ளாச்சி, ஜூன் 15- மண்பாண்ட தொழிலை பாதுகாக்கவும், இத்தொழிலை நம்பி வாழும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் வாழ் வாதாரத்தை பாதுகாத்திடவும், பொள்ளாச்சி சார் ஆட்சியரி டம் மண்பாண்ட தொழிலாளர்கள் மனு அளித்தனர்.

களிமண் கிடைப்பதில் தொடர்ந்து தட்டுப்பாடு நிலவி வரு வதால் மண்பாண்டம் தயாரிக்கும் தொழில் நலிவை சந்தித்து  வருகிறது. பாரம்பரியமாக இத்தொழிலை நம்பியுள்ள மக்கள்  விளக்கு, முகூர்த்த பானை, தாளப் பானை, கடம், பூத்தொட்டி,  அகல் என்று பலவகையான பொருள்கள் மற்றும் விதவித மான மண் பானைகளை தயாரித்து சந்தைபடுத்தி வருகின்ற னர். 

தற்போது மண்பாண்ட பொருட்களுக்கு கிராக்கி இருந்தா லும் களிமண் எடுக்க அனுமதி இல்லாததால் தொழிலினை செய்ய முடியவில்லை‌. கோவை மாவட்டத்தில், பொள்ளாச்சி  சுற்றுவட்டாரப் பகுதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட் டோர் மண்பாண்ட தொழிலை நம்பி வாழ்ந்து வந்த சூழலில்,  தற்போது நூற்றுக்கணக்கானோர் மட்டுமே மண்பாண்ட தொழிலை செய்து வருகின்றனர்.

களிமண் எடுக்க அனுமதி கேட்டு தமிழ்நாடு தெலுங்கு குலாலர் மண்பாண்ட தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அ‌. கேத்தரின் சரண்யாவிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

ஜமாபந்தி அறிவிப்பு

அவிநாசி, ஜூன் 15- அவிநாசி வட்டத்தில் 1433ஆம் பசலி ஆண்டுக்கான வரு வாய் தீர்வாயம் (ஜமாபந்தி) ஜூன் 20 முதல் 26ஆம் தேதி  வரை வட்டாட்சியர் அலுவலகத்தில் நாள்தோறும் காலை 10  மணி முதல் நடைபெற உள்ளது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத் தில் ஜமாபந்தி ஜூன் 20ம் தேதியில் சேவூர் உள்வட்டம் பகுதியி லும், ஜூன் 21ம் தேதியில் அவிநாசி மேற்கு, இராமநாதபுரம், வேட்டுவபாளையம், நம்பியாம்பாளையம் ஆகிய பகுதியி லும், ஜூன் 25ஜூன் அவிநாசி கிழக்கு உள்வட்டம் பகுதியிலும்,  26ம் தேதியில் பெருமாநல்லூர் உள்வட்டம் பகுதியிலும் நடை பெற உள்ளது.

இதில் பொதுமக்கள், கோரிக்கைகளை நேரடியாக திருப் பூர் தனித் துணை ஆட்சியரிடம் மனுக்களாக கொடுத்து உடன டித் தீர்வு காணலாம் என வருவாய்த் துறையினர் அறிவித்துள் ளனர்.

ஈரோடு

இதேபோன்று, ஈரோடு மாவட்டத்தில் 1433-ம் பசலிக் கான வருவாய் தீர்வாயம், ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வட்டங்களிலும் இம்மாதம் 20ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம்  மற்றும் பெருந்துறை ஆகிய வட்டங்களில் 20ஆம் தேதி முதல்  27ஆம் தேதி வரையிலும், அந்தியூர் வட்டத்தில் 20ஆம் தேதி  முதல் 26 வரையிலும், பவானி, நம்பியூர், ஈரோடு, மொடக்கு றிச்சி மற்றும் கொடுமுடி ஆகிய வட்டங்களில் 25ஆம் தேதி  வரையிலும், தாளவாடி வட்டத்தில் 20ஆம் தேதியும், அந்தந்த  வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள் ளது என தெரிவித்துள்ளார்.

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை கைது செய்யக்கோரி புகார் மனு

கோபி, ஜூன் 15- ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள அக்கரைகொடிவேரி சேர்ந்தவர் பண்ணாரி கடந்த சில  ஆண்டுகளுக்கு முன் தனியார் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில்  வேலை செய்து வந்துள்ளார். இவருடன் கோபி ல.கள்ளிப் பட்டி பிரிவு அருகே வசித்து வரும் ஆறுமுகம் (55) என்பவரும்  வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுக ளுக்கு முன்  பண்ணாரி புதிய வீடு கட்ட முடிவு செய்தபோது கட் டிட மேஸ்திரி ஆறுமுகத்தை அணுகியுள்ளார். இதனைய டுத்து, ஓப்பந்தம் செய்த பணத்தை பெற்று கொண்ட ஆறுமு கம் உரிய காலத்தில் வீடு கட்டுமானப் பணியை முடிக்காமல்  கால தாமதம் செய்து வந்துள்ளார். இதுவரை ரூ.20 இலட் சம் பணத்தை பெற்று கொண்டு வீட்டு வேலை முடிப்பது  குறித்து பண்ணாரியும் அவரது மனைவியும், ஆறுமுகத்திடம்  கேட்டுள்ளனர். ஆனாலும், கட்டுமானப் பணியை முடிக்காமல்  இருந்த ஆறுமுகம் அடிக்கடி பண்ணாரியின் மனைவியை தொடர்பு கொண்டு இரட்டை அர்த்த வசனத்தில் பேசியும் செல் போனில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகி றது. 

இதனால், அச்சமடைந்த  பண்ணாரியின் மனைவி கடந்த  சில நாட்களுக்கு முன் கடத்தூர் காவல் நிலையத்தில் அளித்த  புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் கடந்த 10 ஆம்  தேதியன்று ஆறுமுகத்தின் மீது தகாத வார்த்தையால் பேசுதல் (294-பி), கொலை மிரட்டல் விடுத்தல்(506-2), பெண்கள் வன் கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு  செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால், இது வரை புகாரின் அடிப்படையில் ஆறுமுகம் கைது செய்யப்ப டாத நிலையில், கைது செய்யக்கோரி, கோபி துணை காவல்  கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் மனு அளித்தார்.

அன்னூர் ஆட்டுச்சந்தையில் குவிந்த 

கோவை, .ஜூன் 15- இஸ்லாமியர்கள் கொண்டாடும் பக்ரீத் பண்டிகை  நாளை (திங்கள்கிழமை) கொண்டாட உள்ள நிலையில், அன்னூர் சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது. வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்கிச் செல்கின்றனர்.

கோவை மாவட்டம்,  அன்னூர் அதன் சுற்று வட்டார கிரா மங்களில் உள்ள விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.  இங்குள்ள மக்கள் விவசாயத்துடன் சேர்ந்து கால்நடை வளர்ப்பையும் செய்து வருகின்றனர். அன்னூரை சுற்றியுள்ள  பகுதிகளில் புல்வெளிகள் நிறைந்த மேய்ச்சல் நிலங்கள்  அதிகம் உள்ளதால் ஆடுகள் அதிக அளவில் வளர்க்கப்பட்டு  வருகின்றன. 

‌இந்நிலையில், வாரந்தோறும் சனியன்று நடைபெறும் அன்னூர் சந்தையில் விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற் பனை செய்வது வழக்கம். பக்ரீத் பண்டிகைக்கு சில தினங் களே உள்ள நிலையில், சனியன்று அன்னூர் சந்தையில் அதிகாலை 5 மணி  முதலே ஆடுகள் விற்பனை களைகட் டியுள்ளது. இங்கு உள்ள ஆடுகளை வாங்க கோவை, ஈரோடு,  திருப்பூர், நீலகிரி மாவட்டங்களிலிருந்தும் கர்நாடகா, கேரள  மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் சந்தையில் திரண்ட னர். 

இங்கு வெள்ளாடு, குரும்பாடு, செம்மறியாடு,  மலை யாடு உட்பட பல்வேறு வகையான ஆடுகள் போட்டிபோட்டு வாங்கி செல்கின்றனர். குட்டிகள் ஆயிரம் ரூபாயில் இருந்து  5 ஆயிரம் ரூபாய் வரையிலும், திடகாத்திரமான உடல்வாகு டன் சற்று எடை அதிகம் உள்ள ஆடுகள் 8 ஆயிரம் ரூபாய்  முதல் அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற் பனை செய்யப்பட்டு வருகின்றது. சுமார் ரூ. 1 கோடி ரூபாய்  வரை வியாபாரம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்த னர்.

நடக்க இருப்பவை

1 ரத்த தான முகாம்
நாள்: 16.6.2024 ஞாயிறு 
நேரம்: காலை 9 மணி
இடம்: தலைமை மருத்துவமனை கூட்ட அரங்கம், ஈரோடு
ஏற்பாடு: ஈரோடு நகர கமிட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

2 மாதிரி தேர்வுகள்-பயிற்சி வகுப்புகள்
நாள்: ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 9.30 மணி
இடம்: ஈகேஎம் அப்துல்கனி மதரஸா இஸ்லாமியா உயர்நிலைப்பள்ளி, ஈரோடு
ஏற்பாடு: சிறுபான்மை மக்கள் நலக்குழு

 

;