districts

img

பால் கொள்முதல் விலையை உயர்த்துக: கால்நடைகளோடு ஆர்ப்பாட்டம்

பென்னாகரம், அக்.18- பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என  வலியு றுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியா ளர் சங்கம் சார்பில் பென்னாகரம் ஒன்றியம், மடம் கிராமத்தில் கால் நடைகளோடு செவ்வாயன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. பால் கொள்முதல் விலையை லிட் டருக்கு ரூ.10 வீதம் உயர்த்து தர வேண் டும். ஆவின் நிறுவனத்தில் நாள் ஒன் றுக்கு ஒரு கோடி லிட்டர் பாலை கொள்முதல் செய்ய வேண்டும். ஆவின் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள 300 கோடி ரூபாய் இழப்பை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண் டும். பால் கொள்முதல் பாக்கி பணத்தை முழுவதுமாக வழங்க வேண்டும். குழந்தைகள் சத்துணவு திட்டத்தில் பால் பவுடரை சேர்த்து  வழங்க வேண்டும். தீபாவளிக்கு முன் பாக பால் உற்பத்தியாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங் கம் சார்பில் கால்நடைகளோடு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் தருமபுரி மாவட்டத் தலைவர் கே.அன்பு தலைமை வகித்தார். மாநி ணல பொதுச்செயலாளர் பி.பெரு மாள் சிறப்புரையாற்றினார். மாவட்ட  செயலாளர் எஸ்.தீர்த்தகிரி, தமிழ் நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.குமார், மாவட்ட துணைச் செயலாளர் ஆ.ஜீவானந்தம் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏரா ளமானோர் கால்நடைகளோடு கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி னர்.  

தருமபுரி 

இதேபோல் தமிழ்நாடு பால் உற் பத்தியாளர் சங்கம் சார்பில் நல்லம் பள்ளி ஒன்றியம், தடங்கம் கிராமத் தில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தி யாளர் சங்க அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப் பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ஆர்.வள்ளி தலைமை  வகித்தார். மாவட்ட செயலாளர் எஸ். தீர்த்தகிரி, மாவட்ட தலைவர் கே. அன்பு, மாவட்ட துணைத்தலைவர் என்.கந்தசாமி ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நல்லம்பள்ளி  ஒன்றியச் செயலாளர் எஸ்.சின்ன ராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.குப்புசாமி, கே.எல்லப்பன் உட் பட பலர் கலந்து கொண்டனர்.
 

;