districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

குடியிருப்புகளில் மழைநீர்: பொதுமக்கள் மறியல்

குடியிருப்புகளில் மழைநீர்: பொதுமக்கள் மறியல் உதகை, ஜூன் 2- உதகை அருகே குடியிருப்புகளுக்குள் புகுந்த மழைநீரை  உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி  பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சி, 25 ஆவது வார்டுக் குட்பட்ட காந்தல் பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட குடியிருப் புகள் உள்ளன. இந்நிலையில், சனியன்று சுமார் 2 மணி  நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதுகுறித்து  நகராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தும், மழைநீரை  வெறியேற்ற எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்ப டவில்லை. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி பொது மக்கள், உதகை நகர்மன்ற உறுப்பினர் கீதா தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம் பவ இடத்திற்கு வந்த நகராட்சி அதிகாரிகள், உரிய நடவ டிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில் பொது மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

திருச்செங்கோட்டில் மனிதவள மாநாடு

நாமக்கல், ஜூன் 2- திருச்செங்கோட்டிலுள்ள தனியார் கல் லூரியில் நடைபெற்ற மனிதவள மாநாட்டில்  ஏராமானோர் கலந்து கொண்டு, கருத்துரை யாற்றினர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டி லுள்ள விவேகானந்தா தகவல் மற்றும் மேலாண்மையியல் கல்லூரியில் மனிதவள மாநாடு (HR CONCLAVE) நடைபெற்றது. மேலாண்மையியல் கல்லூரியின்  இயக்குநர் மோகனசுந்தரம் வரவேற்றார். தலைமை விருந்தினராக பங்கேற்ற சென்னை யிலுள்ள தனியார் நிறுவனத்தின் நிர்வாகி  ராஜா லட்சுமி சுப்ரமணியன், தொழில்நுட் பத்துடன் மனிதவள மேம்பாட்டுத் திறனின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசினார். கலந்துரையாடல் அமர்வில், எதிர்கால வேலைகளை வழிநடத்த மனப்பான்மை, நுண்ணறிவு அளவு, உணர்ச்சி அளவு, ஆன் மீக அளவு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை  வலியுறுத்தப்பட்டன. இவ்விழாவில் பேராசி ரியர்கள் மற்றும் துறைத்தலைவர்கள், மாண விகள் ஏராளானோர் கலந்து கொண்டனர்.

மின்மாற்றியை தாக்கிய இடி, மின்னல்

மின்மாற்றியை தாக்கிய இடி, மின்னல் கோபி, ஜூன் 2- நம்பியூர் அருகே மின்மாற்றியில் இடி, மின்னல் தாக்கிய  அதிர்வால், அருலிருந்த வீட்டின் சிமெண்ட் ஓடு, மின்சாத னப் பொருட்கள் சேதமடைந்தன. ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகே உள்ள நாச்சிபா ளையம் மாரியம்மன்கோவில் பகுதியில் ஞாயிறன்று மாலை  திடீரென இடி, மின்னல் தாக்கியது. அப்போது, அங்கிருந்த மின்மாற்றியில் இடி, மின்னல் தாக்கி தீப்பற்றி எரிந்தது. இதன்  அதிர்வால் மின்மாற்றி அருகே இருந்த கருப்புசாமி என்பவ ரது வீட்டின் சிமெண்ட் சீட் கூரை மற்றும் வீட்டிலிருந்த குளிர்சா தன பெட்டி, மின்விசிறி மற்றும் மின்சாதனப் பொருட்கள் சேதம டைந்தன. மேலும், இடி விழுந்த சத்தம் அதிகமாக இருந்த தால், மேனாகஸ்ரீ எனபவருக்கு காது வலி ஏற்பட்டு சிகிச்சைக் காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தீப்பிடித்து லாரி சேதம்

தீப்பிடித்து லாரி சேதம் தருமபுரி, ஜூன் 2- தருமபுரியில் பழுது பாா்க்கும் போது, திடீரென லாரி தீப்பி டித்து எரிந்து சேதமடைந்தது. தருமபுரி மாவட்டம், செட்டிக்கரையை அடுத்த பள்ளக் கொல்லையைச் சேர்ந்தவர் ஜெயராமன் (45). இவர் குண்ட லப்பட்டியில் உள்ள பட்டறையில் தனது லாரியில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியில் சனியன்று ஈடுபட்டிருந்தார். அப் போது, திடீரென்று லாரி தீப்பிடித்து எரியத் தொடங்கி யது. இதுகுறித்து தருமபுரி தீயணைப்புத் துறையினர், மதி கோண்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட் டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீய ணைப்புத் துறையினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால்,  அதற்குள் லாரி முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இதுகு றித்து மதிகோண்பாளையம் காவல் துறையினர் விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.

மக்களின் எதிர்ப்பால் கழிப்பறை இடிப்பு

ஈரோடு, ஜூன் 2- ஈரோட்டில் பொதுமக்களின் கோரிக் கையை ஏற்று, பழைய கழிவறை கட்டிடத்தை  இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சி, 20 ஆவது வார்டுக் குட்பட்ட குமலன்குட்டையில் அரசு தொடக் கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு,  50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி  பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் சேதம டைந்த கழிவறை இருந்தது. இதையடுத்து புதிய நவீன கழிப்பறை கட்ட மாநகராட்சி நிர்வாகம் சார்பில், ரூ.30 லட்சம் ரூபாய் ஒதுக் கப்பட்டது. ஆனால், பழைய கழிவறை கட்ட டத்தை இடிக்காமல், புதிய கழிவறை கட் டும் பணியை ஒப்பந்ததாரர் மேற்கொண் டுள்ளார். இதனால் அதிருப்தியடைந்த அப்ப குதி மக்கள், அமைச்சர் முத்துசாமி, ஆட்சி யர் ராஜகோபால் சுன்கரா, மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி உள்ளிட் டோருக்கு புகார் மனு அனுப்பினர். இடிந்து  விழும் நிலையில் உள்ள பழைய கழிப்ப றையை இடித்து விட்டு, புதிய நவீன கழிப் பறை கட்டித்தரவும் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து சேதமடைந்த பழைய கழிப்பறை இடித்து அகற்றப்பட்டு, புதிய கழிப்பறை கட்டும் பணி தற்போது தொடங் கப்பட்டுள்ளது.

பேரூராட்சிகள் உதவி இயக்குநர் பணியிடை நீக்கம்

சேலம், ஜூன் 2- சேலத்தில் பேரூராட்சிகள் உதவி இயக்கு நர் கணேஷ்ராம் பணியிடை நீக்கம் செய்யப் பட்டார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அலு வலகம் செயல்பட்டு வருகிறது. சேலம், நாமக் கல் மாவட்டங்களில் உள்ள பேரூராட்சிக ளின் தலைமையிடமான இந்த அலுவலகத் தில், கணேஷ்ராம் என்பவர் உதவி இயக்கு நராகப் பணிபுரிந்து வந்தார். இவர், வெள்ளி யன்றுடன் பணி ஓய்வுபெறவிருந்த நிலை யில், திடீரென இடைநீக்கம் செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே சிவகங்கையில் பணிபுரிந்த போது நடந்த உள்ளாட்சி தணிக்கையில் ஆட் சேபனைகள் தெரிவிக்கப்பட்டு தடை விதிக் கப்பட்டிருந்தது. அவை இன்னும் நிலுவை யில் உள்ளதால், கணேஷ்ராம் பணியிடை  நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள்  தெரிவித்தனர். அதேபோல, பெத்தநாயக்கன் பாளையம் பேரூராட்சி அலுவலக செயல் அலுவலர் மாதேஸ்வரன் வெள்ளியன்றுடன் பணியிலிருந்து ஓய்வுபெறவிருந்த நிலை யில், ஏற்கனவே கடலூரில் அவர் பணிபுரிந்த  போது நடந்த உள்ளாட்சித் தோ்தல் தணிக்கை யில் ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டு தணிக்கைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அவை இன்னும் நிலுவையில் உள்ளதால்,  அவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள் ளார்.

அனுமதியின்றி மண் அள்ளிவர் கைது

அனுமதியின்றி மண் அள்ளிவர் கைது தருமபுரி, ஜூன் 2- கடத்தூர் அருகே அனுமதியின்றி ஏரியில் மண் அள்ளி வரை காவல் துறையினர் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே கேத்துரெட்டி பட்டி ஏரியில் உரிய அனுமதியின்றி மண் அள்ளுவதாக வரு வாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பே ரில், கிராம நிர்வாக அலுவலர் குமார் மற்றும் உதவியா ளர் கற்பகம் ஆகியோர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந் தனர். அப்போது, அரசு அதிகாரிகளை கண்டதும் ஏரியில் டிராக்டரில் மண் அள்ளிக்கொண்டிருந்தவர்கள் ஓட்டம் பிடித் தனர். அவர்களில் சசிகுமார் (41) என்பவரை மடக்கி பிடித்து,  கடத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதைத்தொ டர்ந்து காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி விசாரணை மேற் கொண்டு சசிகுமாரை கைது செய்தார். மேலும், மண் பாரத்து டன் 2 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பியோ டிய ரங்கநாதன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஏற்காட்டில் குறையாத சுற்றுலாப் பயணிகள் அலை

சேலம், ஜூன் 2- கோடை விழா நிறைவடைந்த நிலையிலும், ஏற்காட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து கொண்டுள்ளனர். 47 ஆவது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த மே 30 ஆம் தேதியன்று நிறைவடைந்தது, மலர்கண்காட்சிக்காக ஏற்காடு அண்ணா பூங்காவில் வைக்கப்பட்ட மலர்கள் மற்றும் மலர்களால் உருவாக்கப்பட்ட வடிவங்கள் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக அப்படியே வைக்கப்பட்டன. அதைக்காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டிற்கு வந்து கொண்டுள்ளனர். அதன்படி, வார விடுமுறை நாளான ஞாயிறன்று ஏற்காட்டில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள், மலர்களுக்கு முன்பு நின்று புகைப்படம் எடுத்தும், மலர்களால் வடிவமைக் கப்பட்டுள்ள கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் காற்றாலை  போன்ற உருவங்களை கண்டு ரசித்தனர். அண்ணாப் பூங்காவில் அமைக்கப்பட்ட செயற்கை நீரூற்று முன்பு நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். மேலும், படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் வெகு நேரம் காத்திருந்து இயற்கை காட்சிகளை ரசித்தவாறு படகுப் பயணம் செய்தனர்.

2,050 கிலோ கஞ்சா கடத்தல்: ஒருவர் கைது

கோவை, ஜூன் 2- காரமடை அருகே 2,050 கிலோ கஞ்சா கடத்தி வந்த நபரை காவல் துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர். கோவை மாவட்டம், காரமடை அருகே உள்ள குருந்த மலை அடிவார பகுதியில் சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா கடத்தி வரப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தனர். அதன்பேரில் உதவி காவல் ஆய்வாளர் அர விந்தராஜன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தே கத்திற்கிடமான வகையில் கையில் பையுடன் நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். இதில், அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்த நிலையில், அவரை காவல் நிலையம் அழைத்துச்சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் துடியலூர் அருகே உள்ள அண்ணா காலனியைச் சேர்ந்த ரங்கநாதன் (40) என்பவதும், சட்டவி ரோதமாக விற்பனைக்காக 2,050 கிலோ கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன்பின், அவரை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

சாலையை மறித்த காட்டுயானைகள்

உதகை, ஜூன் 2- பந்தலூர் அருகே 2 காட்டுயானைகள் சாலையை மறித்து,  உணவு சாப்பிட்ட காட்சிகள் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள பந்தலூர் தாலுகாவிற்குட்பட்டது மூலக்கடை. இந்நிலையில், சனியன்று மாலை அய்யன்கொல்லி செல்லும் சாலையில் இரண்டு யானைகள் அங்கிருந்த மரக்கிளைகளை உடைத்து சாலையில் போட்டது. இதன்பின் இரண்டு யானைகளும் அதே பகுதியில் முகாமிட்டு சுமார் அரைமணி நேரம் அங்கிருந்து மரக்கிளைகளை உண்டது. இதனால், அப்பகுதி மக்கள் வேறு எங்கும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. பொதுமக்க ளும் யானை விரட்ட முயற்சி செய்தும் யானை செல்லாமல் அதே பகுதியில் இருந்த நிலையில், மக்கள் மிகவும் அச்சம டைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்வ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானைகளை விரட்டினர். தற்போது, சாலை மறித்து யானைகள் உணவு சாப்பிட்ட காட்சிகள் இணை யத்தில் வைரலாகி வருகிறது.

பள்ளிகளில் இன்று முதல் சிறப்பு தூய்மைப் பணிகள்

ஈரோடு, ஜூன் 2- “எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” என்ற திட்டத்தின்கீழ், திங்களன்று (இன்று) முதல் சிறப்பு தூய்மைப் பணிகள் மேற்கொள் ளப்பட உள்ளது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அனுப்பப் பட்டுள்ள சுற்றறிக்கையில், “எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி” திட்டத்தின் சிறப்பு செயல்பா டாக திங்களன்று (இன்று) முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை பள்ளிகளில் சிறப்பு தூய்மைப் பணி மேற்கொள்ள தேவையான நடவடிக்கை கள் மேற்கொள்ள வேண்டும். பள்ளி மேலாண் மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர்கள் மன்றம், தன்னார் வலர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். வகுப்ப றைகள், பள்ளி வளாகம், மதிய உணவு திட்ட சமையல் அறை, மாணவர்கள் உணவ ருந்தும் இடம் ஆகிய இடங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சாலை தடுப்புகளை அகற்ற வலியுறுத்தி மறியல்

சேலம், ஜூன் 2- மேச்சேரி - தருமபுரி சாலையில் அமைக் கப்பட்டுள்ள சாலை தடுப்புகளை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சாலை யில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், மேச்சேரியில் இருந்து தருமபுரி செல்லும் சாலையின் நடுவில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. குறுக லான சாலையில் அமைக்கப்பட்ட இந்த தடுப்புகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படு கின்றன; உயிரிழப்புகளும் அதிகரித் துள்ளன. இந்தத் தடுப்புகள் அருகே போதிய வெளிச்சம் இல்லாததால் மேட்டூர் - தருமபுரி இடையே செல்லும் வாகனங்கள் தடுப்பில் மோதி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, சாலை தடுப்பை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி மேச்சேரி பேரூராட்சி கவுன்சிலர் வெங்கட்ராமன் தலை மையில், அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவ லறிந்து வந்த வருவாய்த்துறை, காவல் துறை அதிகாரிகள், நெடுஞ்சாலை துறை அதிகா ரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

கிணற்றுக்குள் கிரேன் விழுந்து விவசாயி பலி

தருமபுரி, ஜூன் 2- பாலக்கோடு அருகே கிணறு ஆழப்படுத்தும் பணியின் போது, கிரேன் கவிழ்ந்த விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், எலங்காளப்பட் டியைச் சேர்ந்த விவசாயி செல்வம் (48). இவருடைய விவசாயக் கிணற்றை ஆழப்படுத்தும் பணியில் சில நாட்களாக தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலை யில், சனியன்று தூர்வாரும் பணியின் போது எதிா்பாராத விதமாக கிரேன் கிணற்றுக்குள் சரிந்து விழுந்தது. இந்த விபத்தில், கிணற்றுக்குள் இருந்த விவசாயி செல்வம், தூர்வா ரும் தொழிலாளர்களான குமார் (22), கிரேன் உரிமையாளர் சின்னசாமி (67) ஆகிய 3 பேரும் கிரேனுக்கு அடியில் சிக்கினர். இதுகுறித்து தகவலறிந்த பாலக்கோடு தீயணைப்புத் துறையினர், நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையில் நிகழ்விடத்துக்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் குமார் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டார். சின்னசாமி பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விவசாயி செல்வம் பலத்த காயமடைந்து நிகழ்விடத்தி லேயே உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோத னைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவ்விபத்து குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

 

;