districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

தோழர் வி.நடராஜன் காலமானார்

திருப்பூர், மே 19 - சிஐடியு பனியன் மற்றும் பொது தொழிலாளர்கள் சங்கத்தின் முழுநேர ஊழியராக, சங்கத்தின் பொருளா ளராக பல ஆண்டு காலம் செயல்பட்ட தோழர் வி.நடரா ஜன் (74வயது) ஞாயிறன்று மாலை 4 மணியளவில் கால மானார். திருமுருகன்பூண்டியில் குடும்பத்துடன் வசித்து வந்த நடராஜன் உடல்நல குறைவு காரணமாக கோவை தனி யார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலன ளிக்காமல் உயிர் நீத்தார். திருப்பூரில் பனியன் கம்பெனியில் அயர்ன் மாஸ்டர் ஆக  வேலை செய்து, பின்னர் முழுநேர ஊழியராக செயல்பட்டார்.  உடல் நலம் பாதிப்பால் ஓய்வில் இருந்தார். பழங்கரை ஊராட்சி வார்டு உறுப்பினராகவும், கட்சி கிளைச் செயலா ளராகவும் செயல்பட்டு இருக்கிறார். பல்லாண்டு காலம் மாதம் 250 செம்மலர், 50 மார்க் சிஸ்ட் பத்திரிகை விநியோகம் செய்து வந்தார். அனை வரிடமும் தோழமையோடு பழகியவர். அவரது மறைவு செய்தி அறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்க ராஜ் உள்ளிட்ட கட்சியினர் நேரில் அவருக்கு அஞ்சலி செலுத் தினர். ஆத்துப்பாளையம் மின் மயானத்தில் அவரது உடல்  ஞாயிறன்று இரவு 7 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.

மழையால் குதிரை பந்தயம் ரத்து

மழையால் குதிரை பந்தயம் ரத்து உதகை, மே 19- உதகையில் பெய்து வரும் மழையால் குதிரை பந்தய ஓடுதளம் மோசமானதால் இரண்டு நாள் குதிரை பந்தயம் ரத்து செய்யப்பட்டது. உதகையில் கோடை சீசனின், முதல் நிகழ்ச்சியாக மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் ஆண்டு தோறும் குதிரை பந்த யம் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு குதிரை பந்தயம்  கடந்த ஒரு மாதமாக, வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுகி ழமைகளில் நடந்து வருகிறது. இந்நிலையில், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு உட்பட சில மாவட்டங்களில் கன மழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம்  அறிவித்துள்ளது. அதன்படி, கடந்த இரண்டு நாட்களாக உதகையில் மழை  பெய்ததால், உதகை குதிரை பந்தயம் ஓடுதளம் மோசமான  நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து, சனி மற்றும்  ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்க இருந்த குதிரை பந்தயம்  ரத்து செய்யப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட பந்தயங்கள் ஜூன். 1 ஆம் தேதி நடைபெறுமென மெட்ராஸ் ரேஸ் கிளப்  நிர்வாகம் அறிவித்துள்ளது.

மின்சாரம் தாக்கி பலியான காட்டு யானை

மின்சாரம் தாக்கி பலியான காட்டு யானை உதகை, மே 19- நீலகிரி, குஞ்சப்பனை நீலங்காடு பகுதியில் வெள்ளி யன்று இரவு புகுந்த காட்டு யானை,  புளியன் என்பவ ரின் தோட்டத்தில்  விளைந்துள்ள பலாப் பழங்களை உண்ப தற்கு முயன்றுள்ளது. அப்போது, பலா மரத்தை யானை சாய்க் கையில், மரத்துடன் சேர்த்து  மின்கம்பியும் விழுந்துள்ளது. மின்கம்பி விழுந்ததில் எதிர்பாராதவிதமாக யானை மின்சா ரம் தாக்கி உயிரிழந்தது. தகவலறிந்து வந்த வனத்துறையி னர், மருத்துவர் உதவியுடன் இறந்த யானைக்கு உடற்கூ றாய்வு செய்தனர். அதில் அந்த யானை 15 வயது மதிக் கத்தக்க ஆண் காட்டு யானை என்று தெரியவந்தது. தொடர்ந்து  வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

உழவர் சந்தை முன்பு குளம் போல் தேங்கும் மழைநீர்

உடுமலை, மே 19- உடுமலை அருகே உள்ள உழவர் சந்தை முன்பு மழைநீர் குளம் போல்  தேங்குவதால் விவசாயிகள் மற்றும்  பொதுமக்கள் பெரிதும் பாதிப்படை கின்றனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை கபூர்கான் வீதியில் உழவர் சந்தை உள் ளது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட விவ சாயிகள் தங்கள் விளைபொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்ற னர். சமீபத்தில் பெய்த கோடை மழை காரணமாக உழவர்சந்தை முன்பு குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் உழவர்சந்தைக்கு வரும் பொதுமக்கள், விவசாயிகள், வியா பாரிகள் அவதிப்படுகின்றனர். இதே போல், ரயில் நிலையம் முன்பும் தண்ணீர் தேங்கியுள்ளது. கொசுக்கள் பெருகி நோய் பரவும் அபாயம் உள்ளது.  நெடுஞ்சாலையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்தவாறு குளம்போல் தண் ணீர் தேங்கி நிற்கிறது.  கோடை மழைக்கே தண்ணீர் தேங்கி னால், விரைவில் பருவமழை துவங் கும்போது அப்பகுதிக்கு செல்லவே முடியாத நிலை ஏற்படும். எனவே, சம்பந் தப்பட்ட துறையினர் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்  என பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியம் மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு சேலம், மே 19- நல்லாகவுண்டனூர் ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சி யத்தால், மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்துள்ள தாகக்கூறி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடு பட்டனர். சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்துள்ள நல்லா கவுண்டனூர் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி ரோஜா. இவர்களது 8  வயது மகன் லிங்கேஸ்வரன், அங்குள்ள பள்ளியில் நான் காம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், அருந்ததி யர் காலனியில் மின்மோட்டார் உள்ள அறையில் மின்சா ரம் கசிந்து வருவது குறித்து, பலமுறை ஊராட்சி நிர்வா கத்திடம் கிராம மக்கள் தெரிவித்தும் இதுவரை எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், சிறு வன் லிங்கேஸ்வரன் அவ்வழியாக செல்லும்போது மின் சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இதுசம்பந்தமாக பிரச்சனை ஏதும் நடைபெறா மல் இருக்க ஊர் பொதுமக்களை அதிகாரிகள் மிரட்டு வதாகவும், உயிரிழந்த சிறுவனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காட்டுயானையால் பயிர்கள் சேதம்

காட்டுயானையால் பயிர்கள் சேதம் தருமபுரி, மே 19- பாலக்கோடு அருகே உள்ள வாழைத்தோட்டம் கிரா மத்தில் ஒற்றை யானை புகுந்து விளைநிலங்களை சேதப் படுத்தியது குறித்து வனத்துறையினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வனச்சரகத்தில் வனத்தையொட்டியுள்ள கிராமங்களில் உள்ள விளை நிலங்களில் அண்மைக்காலமாக யானைகள் அவ்வப் போது நுழைந்து அங்குள்ள பயிர்களைச் சேதப்படுத்தி வருகின்றன. அவற்றை வனத்துறையினர் கண்கா ணித்து மீண்டும் வனப்பகுதிக்கு இடம் பெயரச்செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நி லையில். பாலக்கோட்டை அடுத்த வாழைத்தோட்டம் கிராமத்தில் உள்ள விளைநிலங்களில் வெள்ளியன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை  நுழைந்து மா, தென்னை, வாழை மரங்களை முறித்து சேதப்படுத்தியது. சேதமடைந்த நிலங்களைப் பார்வை யிட்டு விரைந்து நிவாரணம் வழங்க வேண்டும் என  பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பாலக்கோடு வனச்சரகர் நடராஜன் தலை மையிலான வனத்துறை குழுவினர் வாழைத்தோட்டம் பகுதியில் காட்டுயானை சேதப்படுத்திய விளைநிலங் களை ஆய்வுசெய்து சேத மதிப்பை கணக்கெடுத்தனர். மேலும், விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என பாதிக் கப்பட்ட விவசாயிகளிடம் உறுதியளித்தனர்.

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 600 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 600 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு சேலம், மே 19- மேட்டூர் அனல் மின் நிலையத்தின் இரண்டாவது பிரிவில் உள்ள கொதிகலன் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக 600 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளது. சேலம் மாவட்டம், மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்படுகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகா வாட் திறன் கொண்ட 4 அலகுகள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் 810 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டாவது பிரி வில் 600 மெகா வாட் திறன் கொண்ட ஒரு அலகு செயல் பட்டு வருகிறது. இதன்மூலம் 600 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மொத்தமாக 1,440 மெகா  வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இந்நிலை யில், சனியன்று மேட்டூர் அனல் மின் நிலையத்தின் இரண்டாவது பிரிவில் உள்ள கொதிகலன் குழாயில் வெடிப்பு ஏற்பட்டதன் காரணமாக 600 மெகா வாட் மின் உற்பத்தி தடைபட்டுள்ளது. கொதிகலன் குழாய் வெடிப்பை சரி செய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடு பட்டுள்ளனர். ஓரிரு நாட்களில் கொதிகலன் குழாய் வெடிப்பு சரி செய்யப்பட்டு மீண்டும் உற்பத்தி தொடங்கப் படும் என்று பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தேர்வு அறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

சேலம், மே 19- தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் மீது போச்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயதான மாணவி, அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் மார்ச் மாதம் நடைபெற்ற 11 ஆம் வகுப்பு ஆங்கி லத் தேர்வு எழுதிக் கொண்டிருந்தார். அப்போது தேர்வு அறை கண்காணிப்பாளராக இருந்த எடப்பாடி அரசு பள்ளி ஆசிரி யர் மாரிமுத்து, அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற் றோர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கபீரிடம் புகா ரளித்தனர். அதன்பேரில் கல்வித்துறை அதிகாரிகள் விசா ரணை மேற்கொண்டு ஆசிரியர் மாரிமுத்துவை தேர்வு அறை  கண்காணிப்பாளர் பணியிலிருந்து விடுவித்தனர். மேலும், மாணவியின் புகார் தொடர்பாக சேலம் மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு குழும அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது உறு தியானது. இதையடுத்து சங்ககிரி அனைத்து மகளிர் காவல் துறையினர், மாரிமுத்து மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக் குப்பதிவு செய்து, தலைமறைவான அவரை தேடி வரு கின்றனர்.

நீர்வரத்தைப் பொறுத்து ராஜவாய்க்காலில் தண்ணீர் திறப்பு
விவசாயிகளின் கோரிக்கைக்கு பொதுப்பணித்துறையினர் பதில்

நாமக்கல், மே 18- ராஜவாய்க்காலில் கூடுதலாக தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில்,  நீர்வரத்தை பொறுத்து படிப்படி யாக தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரி வித்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து  குடிநீர் பயன்பாட்டுக்கு மட்டும் தண் ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி யில் குடிநீர் பயன்பாட்டுக்காக திறக் கப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதி  வரை செல்ல வேண்டும் என்பதால், பரமத்திவேலூர் வட்டம், ஜேடர் பாளையம் படுகை அணை பகுதி யில் இருந்து ராஜவாய்க்கால் மற் றும் அதன் துணை வாய்க்கால்க ளான பொய்யேரி, குமாரபாளை யம், மோகனூர் வாய்க்கால்களி லும் தண்ணீர் நிறுத்தப்பட்டது. இந்த வாய்க்கால்களை நம்பி சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்க ரில் கரும்பு, வாழை, வெற்றிலை, கோரை, மரவள்ளி உள்ளிட்ட பயிர் கள் பயிரிடப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழகம் முழுவதும் பரவலாக கடும் வெயி லின் தாக்கம் அதிகரித்து காணப் பட்டது. வெயிலின் தாக்கம் அதிக ரித்தும், வாய்க்கால்களில் தண் ணீர் இல்லாததாலும் பயிர்கள் வாடி கருகும் நிலை ஏற்பட்டுள்ள தென அப்பகுதி விவசாயிகள் கூறி யுள்ளனர்.  இந்நிலையில், கடந்த சில நாட் களுக்கு முன்பு வாடும் பயிர்களைக் காக்கும் வகையில், ராஜவாய்க்கா லில் தண்ணீர் திறந்துவிடப்பட் டது. ஆனால், கடைமடை வரை தண்ணீர் செல்லவில்லை எனக் கூறி விவசாயிகள் பொதுப்பணித் துறை அலுவலகத்தில் குவிந்தனர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் ஆனந்தன், உதவி  செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர் சுரேகா ஆகி யோர் விவசாயிகளிடம் பேச்சு வாா்த்தை மேற்கொண்டனர். அப் போது, தண்ணீரின் வரத்தை பொறுத்து ராஜவாய்க்காலில் படிப்படியாக தண்ணீர் திறக்கப் படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதியளித்தனர். அதனையேற்று கொண்ட விவசாயி கள் அங்கிருந்து கலைந்து சென்ற னர்.


 
 

;