districts

சாலையோர ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்

தருமபுரி, ஜூன் 17- பென்னாகரத்தில் பிரதான சாலை யோர இடங்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பென்னா கரத்தில் தற்காலிக பேருந்து நிலையம், வட்டார வளர்ச்சி அலுவலகம் பகுதி யில் செயல்பட்டு வந்தாலும், பழைய பேருந்து நிலையம் பகுதியில் எப்போ தும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் பென்னாகரம் பேரூராட்சி நிர்வா கத்தின் சார்பில் பழைய பேருந்து நிலையம், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட கடைகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒப்பந்த ஏலம் விடப்பட்டது. அதே போல முள்ளுவாடி, பழைய பேருந்து நிலையம் கடைவீதி உள்ளிட்ட பகுதிக ளில் 100க்கும் மேற்பட்ட கடைகள், பென்னாகரம் - ஒகேனக்கல் செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ளன. பென்னாகரம் பகுதி 50க்கும் மேற்பட்ட கிராமங்களைக் கொண்டுள்ளதால் கல்வி, வேலைவாய்ப்பு, காய்கறி களைச் சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக நாள்தோறும் கிராமப் பகுதிகளில் இருந்து இருசக்கர வாகனத்தில் ஏராளமானோர் பென்னாக ரத்துக்கு வந்து செல்கின்றனர். பென்னாகரம் பழைய பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட பகுதி களில் உள்ள அரசு மற்றும் தனியார் கடைகளின் முன்பு தக்காளி கடை, பழக்கடைகள் வைப்பதற்கு ஏற்க னவே பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் ஒப்பந்த காலத்திற்கு கடைகள் எடுத்த கடை உரிமையாளர்களிடம் ரூ.1,000 முதல் ரூ.70 ஆயிரம் வரை உள் வாடகை வசூல் செய்து அனுமதி யின்றி கடைகள் வைக்க அனுமதிக்கின் றனர். கடை வைப்போர் நாளடைவில் பிரதான சாலைகளை ஆக்கிரமிப்ப தால் பொருட்கள் வாங்குவதற்காக வருவோர் தங்களது வாகனங்களை சாலையில் நிறுத்துகின்றனர். மேலும், காவல் நிலையம் எதிரே உள்ள வாரச் சந்தை பகுதியில் தினசரி காய்கறி கடை கள் வைப்பதற்கான இடம் ஒதுக்கப்பட்ட போதிலும், ஒகேனக்கல் பிரதான சாலையினை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளதால் காலை, மாலை வேளையில் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சில சமயங்களில் விபத்துகளும் நிகழ்கின் றன. பிரதான சாலைகளை ஆக்கிர மித்து உள்வாடகையின் மூலம் கடை கள் வைப்பதால் ஏற்படும் பிரச்னை கள் குறித்து பென்னாகரம் பேரூராட்சி செயல் அலுவலர், நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர் ஆகியோரி டம் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அரசு, தனியார் கடைகளின் முன்பு உள்வாடகைக்கு வைக்கப்பட்டுள்ள கடைகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற உள்ளாட்சி நிர்வா கம், நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.