மே.பாளையம், டிச.4- பவானியாற்றை முற்றிலும் வறண்டு போகச் செய்யும் புதிய குடிநீர் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேட்டுப்பாளையம் பகுதி பொதுமக்கள் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட் டங்களில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையம் பகுதியில் உள்ள பவானி நதி கோவை, திருப்பூர், ஈரோடு என மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் முப்பது லட்சம் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், பன்னி ரெண்டு லட்சம் ஏக்கர் விளை நிலங்களின் பாசன ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. மேலும், மேட்டுப்பாளையம், காரமடை, சிறு முகை, அன்னூர், அவிநாசி, திருப் பூர் உள்பட 17 கூட்டு குடிநீர் திட்டங் கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. இத்திட்டங்கள் மூலம் பல லட்சம் மக்கள் பயன்பெறும் வகை யில் நாளொன்றுக்கு 10 கோடியே 60 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. கேரள மலைக்காடுகள் மற்றும் நீலகிரி மலைப்பகுதிகளை நீர்பி டிப்புப் பகுதியாக கொண்ட பவானி யாற்றில் மழைக்காலம் தவிர பிற மாதங்களில் ஆற்றின் நீர் வரத்து மொத்தமே 7 கோடியே 40 லட்சம் லிட்டர் தான் என்பது பொதுப்பணித் துறையின் நிர்வாக பொறியாளர் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப் பட்டுள்ளது. இதனால் ஆண்டுக்கு ஏழு முதல் எட்டு மாதங்கள் வரை ஆற்றில் போதிய நீர் வரத்தின்றி பவானியாற்றை குடிநீர் ஆதாரமாக கொண்ட பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவது வழக்கம். இந்நிலையில், கோவை மாநக ராட்சியின் பில்லூர் மூன்றாம் குடிநீர் திட்டத்திற்கு நாளொன் றுக்கு 29 கோடியே 50 லட்சம் லிட்டர் தண்ணீரும், திருப்பூர் மாநக ராட்சியின் நான்காவது குடிநீர் திட்டத்திற்கு நாளொன்றுக்கு 19 கோடியே 60 லட்சம் தண்ணீ ரும் மேட்டுப்பாளையம் பவானி யாற்றில் இருந்து எடுக்க திட்ட மிடப்பட்டு, இப்புதிய திட்டங்க ளுக்காக ராட்சத குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் ஏற்கனவே செயல் பாட்டில் உள்ள 17 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் முடங்கி போவதோடு, ஆறே வறண்ட நிலைக்கு தள்ளப்ப டும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதுகுறித்து கோவை மாநகராட்சி, முதல்வரின் தனிப்பிரிவிற்கு கடிதம் அனுப்புதல், ஆர்ப்பாட்டங்கள் என பலவாறாக போராடியும் பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில், வெள்ளியன்று அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு கடை யடைப்பு போராட்டத்தை மேட்டுப் பாளையம் பகுதி மக்கள் முன்னெடுத்துள்ளனர். இதில், மேட்டுப்பாளையம் குடிநீர் பாதுகாப்பு குழு மற்றும் பல்வேறு சமூக நல அமைப்புகள், வணிகர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சியினர் ஆதரவுடன் கடையடைப்புப் போராட்டம் நடை பெறுவதால் மேட்டுப்பாளையம் மற்றும் இதன் சுற்றுப்புறப் பகுதிக ளில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மேட்டுப்பாளையம் பேருந்து நிலை யம் எதிரே ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இதனால் இப்பகுதியின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.