districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

புதிய சாலை அமைக்கும் திட்டம்: பொதுமக்கள் எதிர்ப்பு

ஈரோடு, மே 16- எல்லீஸ்பேட்டை அருகே 100 அடி அகலத்தில் சுற்று வட்டச் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட நகர   ஊரமைப்பு அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். ஈரோடு மாவட்டம், சாவடிபாளையம் புதூர் முதல் கவுந் தப்பாடி அருகே உள்ள எல்லீஸ்பேட்டை வரை, 100 அடி  அகலத்தில் சுற்றுவட்டச் சாலை (ரிங் ரோடு) அமைக்க  அரசு திட்டமிட்டுள்ளது. 32 கி.மீ. தூரம் அமையவுள்ள இந்த  சாலைப் பணிக்கான திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு வருகி றது. இதற்கிடையில், இந்த சுற்றுவட்டச் சாலைக்காக பல்வேறு கிராமங்களில் உள்ள விளை நிலங்கள், குடியி ருப்புகள் போன்றவற்றை கையகப்படுத்தும் சூழல் ஏற்பட் டுள்ளது. இதற்காக இச்சாலை அமையும் கிராம மக்களுக்கு,  ஈரோடு சம்பத் நகரில் உள்ள மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனி டையே, இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சாவடி பாளையம் புதூர், ஓலப்பாளையம், பிச்சாண்டம்பாளையம், காஞ்சிகோவில், திருவாச்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங் களைச் சேர்ந்த மக்கள், ஈரோடு, சம்பத் நகரில் உள்ள மாவட்ட  நகர ஊரமைப்பு அலுவலகத்தில் புதனன்று மனு அளித்த னர். அம்மனுவில், சாவடிபாளையம் புதூர் முதல் எல்லீஸ் பேட்டை வரையிலான சுற்று வட்டச்சாலைக்கான பாதை யில் பல வீடுகள், கட்டடங்கள், பொது இடங்கள், வழித்த டங்கள் மற்றும் ஏராளமான விளை நிலங்களும், பல  ஆண்டுகள் வளர்க்கப்பட்டுள்ள மரங்களும் உள்ளன. அவற்றை எல்லாம் அகற்றும்போது எங்களது வாழ்வாதா ரம் பெருமளவில் பாதிக்கப்படும். சுற்று வட்டச்சாலை அமை யும் இடங்களில் பல தலைமுறையாக வசிப்போரின் வீடுகள்,  விளை நிலங்கள் உள்ளிட்ட வாழ்வாதரத்தை அழிக்கும் இதுபோன்ற திட்டங்கள் எங்களுக்கு தேவை இல்லை. எனவே, இந்த திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

வணிக வளாகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு 
வணிக வளாகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு  உதகை, மே 16– பூ மாலை வணிக வளாகத்தில் தண்ணீர் வசதி இல்லாத தால் 8 கடைகள் காலி செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டம், உதகை சேரிங்கிராஸ் பேருந்து நிலைத்தின் அருகே நகராட்சி சொந்தமான பூ மாலை வணிக  வளாக கட்டடம் செயல்பட்டு வருகிறது. இங்கு, மகளிர் குழு உட்பட பலர் கடை வைத்து வியாபாரம் செய்தனர். இதன்  மூலம் நகராட்சிக்கு மாதந்தோறும் வாடகை வருமானம் கிடைக்கிறது. கடந்த சில மாதங்களாக கடும் வறட்சியால் உதகையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. ஆனால், வணிக வளாகத்தில் இருந்த தேனீர் கடைகள், உணவு விடுதிகள் தண்ணீர் வசதி இல்லாததால் வியா பாரத்தில் தொய்வு ஏற்பட்டது. மேலும், தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர கோரி வியாபாரிகள் நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும், நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவ டிக்கையும் எடுக்கயில்லை. அதிருப்தி அடைந்த வியாபா ரிகள் குறிப்பாக தண்ணீர் தட்டுப்பாட்டால் அந்த வணிக வளாகத்திலிருந்த, 8 கடைகளை காலி செய்து சென்றனர். 

இளம்பெண் தற்கொலை

ஈரோடு, மே 16- சித்தோடு அருகே இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், நசியனூர் அருகே தொட்டிபாளையம், அரிசன காலனியைச் சேர்ந்தவர் வனிதா(25). பட்டியலி னத்தைச் சேர்ந்த இவர், அந்தப்பகுதியில் உள்ள  ஆதிக்க  சமுகத்தை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரை காதலித்து திரு மணம் செய்து கொண்டார். வனிதா ஈரோடு கிருஷ்ணா மருத்துவமனையில் வேலை செய்து வந்தார். சுரேஷ்குமார் டீ  கடையில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு சூர்யபி ரகாஷ் (7) என்ற மகன் உள்ளார். காதலித்து திருமணம் செய்து கொண்டபோதும், இவர்களுக்கிடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனையடுத்து, கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.  வனிதா, பெற்றோர் வீட்டில் மகனுடன் வசித்து வந்தார். அவ்வப்போது சென்று மனைவியையும், மகனையும் சுரேஷ் குமார் பார்த்து வருவார்.  தற்போது, சுரேஷ்குமார் அனுமன்பள்ளி அருகே பேக்கரி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த  திங்களன்று சுரேஷ்குமார் மகனையும், மனைவியையும் பார்க்க வந்து மகனையும் உடன் அழைத்துச் சென்று விட் டார். பின்பு அன்று மாலையே வனிதா தனது தந்தையு டன் மகனை அழைத்து வரச் சென்றார். ஆனால் மகன் தாயாரு டன் வர மறுத்ததாகத் தெரிகிறது. இதனால் சோகமாக வந்த  வனிதா, வீட்டிற்குள் சென்றவர் வெகுநேரமாகியும் கதவைத்  திறக்கவில்லை. இதனால் வனிதாவின் சகோதரர் சன்ன லைத் திறந்து பார்த்த போது, வனிதா மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கிக் கொண்டிருந்துள்ளார். வீட்டுக்க தவைத் திறந்து உள்ளே சென்று பார்த்த போது, பேச்சு  மூச்சு இல்லாமல் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட் டது. இதுகுறித்து சித்தோடு காவல் நிலையத்தில் வனி தாவின் தாயார் ரோசினி அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின் றனர்.

ரூ.2.75 கோடி மோசடி – பட தயாரிப்பாளர் கைது!

கோவை, மே 16- படத்தை தயாரிக்க முதலீடு செய்தால் லாபம் எனக் கூறி  ரூ.2.75  கோடி மோசடி செய்த மலையாள பட தயாரிப்பாளரை, கோவை போலீஸார் கைது செய்தனர். கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் ஜானி தாமஸ் (65).  மலையாள சினிமா பட தயாரிப் பாளர். இவர் மீது கோவை வட வள்ளி குருசாமி நகரை சேர்ந்த துவாரக் உதய சங்கர் என்பவர் கோவை மாநகர குற்றப் பிரிவு போலீசில் புகார் அளித்தார்.  அப்புகார் மனுவில், நான் தற் போது கனடாவில் வசித்து வரு கிறேன். கடந்த 2016 ஆம் ஆண்டு, நான் கத்தாரில் பணியாற்றிய போது மலையாள திரைப்பட தயாரிப்பாளர் ஜானி தாமஸ், எனக்கு அறிமுகம் ஆனார். அப் போது அவர் 2 மலையாள சினிமா  படங்களை தயாரிக்க போவதாக தெரிவித்தார். அந்த படங்களுக்கு முதலீடு செய்தால் நல்ல வருமா னம் கிடைக்கும் என்றார்.  இதனைத்தொடர்ந்து நான்  படத்தில் முதலீடு செய்ய விரும்பி  ரூ.75 லட்சம் கொடுத்தேன். அதன் படி, அவர்கள் ‘நான்சென்ஸ்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கினர். தொடர்ந்து படத்தை முடிக்க மேலும் ரூ.2 கோடி கேட்டார். நானும் ரூ.2 கோடியை கொடுத்தேன். அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு எனது பணத்தை திரும்ப கேட்ட போது,  படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்து, ஜானி தாமஸ் எனக்கு ரூ.50 லட் சத்தை மட்டும் லாபத்தொகையாக கொடுத்தார். அதன் பின்னர் நான் கொடுத்த ரூ.2.75 கோடியை தரா மல் காலம் தாழ்த்தி வந்தனர். இந்த பணத்தை நான் வடவள்ளியில் இருந்த போது பரிவர்த்தனை செய்ததால் கோவை மாநகர குற் றப்பிரிவு போலீசில் புகார் அளித்து  உள்ளேன். ஜானி தாமஸ், அவ ருடைய மகன் ரான் ஜானி ஆகி யோர் மீது நடவடிக்கை எடுத்து  எனது பணத்தை மீட்டு தர வேண் டும் என அதில் கூறியிருந்தார். புகாரின் பேரில், கோவை மாந கர குற்றப்பிரிவு போலீசார் ஜானி  தாமஸ், அவருடைய மகன் ரான்  ஜானி ஆகியோர் மீது வழக்குப்  பதிவு செய்தனர். மேலும் அவர்கள்  இருவரும் வெளிநாடு தப்பி செல் லாமல் இருக்க லுக் அவுட் நோட் டீஸ் வழங்கினர். இந்த நிலையில், ஜானி தாமஸ் நெடும்பாசேரி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு தப்பி செல்ல முயன்ற தாக தெரிகிறது. இதையறிந்த கொச்சி போலீசார் ஜானி தாமசை,  நெடும்பாசேரி விமான நிலையத் தில் பிடித்தனர். இதுகுறித்து அவர்கள் கோவை மாநகர குற் றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்று ஜானி தாமசை கைது செய்து விசாரித்து வரு கின்றனர்.

மின்விபத்துகளை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவி வழங்கல்

சேலம், மே 16- சேலம் மின்பகிர்மானத்துக்குட்பட்ட பகு திகளில், மின்விபத்துகளைத் தடுக்கும் வகை யில் மின்கம்பங்களில் பணிபுரியும் ஊழி யர்களுக்கு முன்னெச்சரிக்கை ஒலி எழுப்பும்  கருவி வழங்கப்பட்டது. தமிழ்நாடு மின்சாரத்துறையில் மின்கம் பங்களில் ஏறி பணிபுரியும் ஊழியர்களுக்கு அவ்வப்போது மின்சாரம் பாய்ந்து விபத்துக் கள் நேரிடுகின்றன. இதனால் உயிரிழக்கும்  நிலை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில்,  மின்கம்பங்கள் மீது பணிபுரியும் ஊழியர்க ளின் நிலைமையைக் கருத்தில் கொண்டு  தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மின்கம்பங்களில் பணிபுரியும் ஊழியர்கள்  பணியில் ஈடுபட்டிருக்கும்போது, விபத்துக ளைத் தடுக்கும் வகையில் எச்சரிக்கை மணி  ஒலிக்கும் கருவி வழங்கப்பட்டது. சேலம்  மின்பகிர்மானத்துக்குட்பட்ட மரவனேரி பிரிவு அலுவலக வளாகத்தில் மின்மேற் பார்வைப் பொறியாளர் தண்டபாணி, மின்  ஊழியர்களுக்கு விபத்தைத் தடுக்கும்  எச்சரிக்கை மணி ஒலிக்கும் கருவியை  வழங்கினார். இதனை கையிலோ அல்லது  தலையிலோ மின்ஊழியர்கள் பொருத்திக் கொண்டு கம்பங்களில் ஏறும்போது, மின்சா ரம் இருந்தால் அந்தக் கருவி எச்சரிக்கை  விடுக்கும். அதை வைத்து மின் ஊழியர்கள்  விபத்திலிருந்து தப்பிக்கும் வகையில்  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து மின் மேற்பார்வைப் பொறியாளர் தண்டபாணி கூறுகையில், சேலம் மாவட்டத்தில் 450 மின் ஊழியர்கள் உள்ளனர்; அவர்கள் அனைவருக்கும் விபத் தைத் தடுக்கும் வகையில் மின் ஒலி எழுப் பும் கருவி வழங்கப்பட்டுள்ளன. இதனை பொருத்திக்கொண்டு, ஊழியர்கள் மின்கம் பங்களில் பணிபுரியும் போது மின்சாரம் இருந்தால், மூன்று அடிக்கு முன்பே அவர்க ளுக்குத் தெரிந்து விடும். இதனால் உயிர்சே தம் ஏற்படாது. இதனைக் கருத்தில் கொண்டு  இந்தக் கருவி தற்போது வழங்கப் பட்டுள்ளது. பணியில் இருக்கும்போது மின் ஊழியர்கள், ஒலி எழுப்பும் கருவியைப் பய படுத்தாமல் இருந்தால், அவர்கள் மீது நட வடிக்கை எடுக்கப்படும், என்றார்.

பொள்ளாச்சி பகுதியில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி

பொள்ளாச்சி, மே 16- தமிழகத்தில் கோடை வெயில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல்  மாதங்களில் அளவுக்கு அதிகமாக இருந்தது. இதனால், பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் தென்னை மரங்க ளுக்கு தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்பட்டது. விவசாயிகள் தென்னை மரங்களுக்கு தேவையான தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர். பல  இடங்களில் தென்னை மரங்கள் காய்ந்து விட்டன. கடும்  வெயிலினால் தென்னை மரம் மட்டுமல்லாது இதர விவசா யமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், தற் போது தமிழகம் முழுவதும் பரவலாக கோடை மழை பெய்து  வருகிறது.  பொள்ளாச்சி பகுதியில் கடந்த மூன்று நாட்களாக நல்ல  மழை பெய்துள்ளதால், காயும் நிலையில் இருந்த தென்னை  மரங்களுக்கும் தண்ணீர் கிடைத்தது. இதனால் தற்போது விவ சாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மகளிரை ஏற்றாமல் சென்ற அரசு பேருந்து

ஓட்டுநருக்கு அறிவுரை

ஈரோடு, மே 16- மகளிரை ஏற்றாமல் சென்ற அரசு  பேருந்து ஓட்டுநருக்கு மார்க்சிஸ்ட் கட்சி யினர் அறிவுரை கூறி அனுப்பிவைத்த னர். ஈரோடு மாவட்டம், மூலப்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் வியாழனன்று பகல் 2 மணியளவில் 4 பெண்கள் நின்றிருந்தனர். ஈரோடு செல்வதற்காக காத்திருந்த நிலையில் அவ்வழியாக தடம் எண். 39ஏ கொண்ட நகரப் பேருந்து வந்தது. அப்பேருந்தை நிறுத் துமாறு பெண்கள் கைகாட்டினர். ஆனால் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தா மல் சென்றார். இதனை கவனித்த மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு  தாலுகா செயலாளர் என்.பாலசுப்பிர மணி மற்றும் மாவட்டக்குழு உறுப்பி னர் லலிதா ஆகியோர் தனது இரு சக்கர  வாகனத்தில் பேருந்தை பின்தொடர்ந் தார். பின் சிக்னலில் நின்ற பேருந்தை மறித்து, ஏன் மூலப்பாளையம் நிறுத்தத் தில் பேருந்தினை நிறுத்தாமல் வந்தீர் கள். மகளிர்க்கு கட்டணம் வசூலிப்ப தில்லை என்பதாலே, அரசுக்கு கெட்ட  பெயர் ஏற்படுத்துகீறீர்களே என்றார். இதற்கிடையே அவ்வழியாக வந்த ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பா ளர் கே.ஈ.பிரகாசும், ஓட்டுநரின் செய லுக்கு கண்டனம் தெரிவித்தார். இதனை யடுத்து, தவறை உணர்ந்த ஓட்டுநரும், இனி இது போன்று நடைபெறாது என  வருத்தம் தெரிவித்தார். இதனைய டுத்து, அனைவரும் கலைந்து சென்ற னர்.  பேருந்து நிறுத்தத்தில் பெண்களை  ஏற்றாமல் சென்ற அரசு பேருந்தை மறித்து ஓட்டுநரின் தவறை மார்க்சிஸ்ட்  கட்சியினர் உணரச்செய்த சம்பவம், அப் பகுதி மக்களிடம் பாரட்டை பெற்றது.

வாடகை பாக்கி இல்லாத வியாபாரிகளுக்கு கடை
வாடகை பாக்கி இல்லாத வியாபாரிகளுக்கு கடை உதகை, மே 16– நீலகிரி மாவட்டம், உதகை மார்க்கெட் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. 1500 க்கும் மேற்பட்ட கடைகள் இந்த  வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு பழைய கடை களை இடித்து புதிய கடைகள் கட்ட நகராட்சி நிர்வாகம் நடவ டிக்கை எடுத்தது. கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத் தில், 17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. முதற்கட்டமாக, 180  கடைகள் கட்டப்படுகிறது. அங்கு கடை வைத்த வியாபாரி களுக்கு ஏ.டி.சி பகுதியில் தற்காலிக கடைகள் கட்டப்பட்டு  வருகிறது. இது குறித்து, நகராட்சி ஆணையர் ஏகராஜ் கூறுகை யில், ‘‘ஏ.டி.சி யில், 162 தற்காலிக கடைகள் கட்டப்பட் டுள்ளது. 80 கடைகள் செயல்பட்டு வருகிறது. மீதமுள்ள, 82  கடைகளுக்கு நகராட்சியில் வாடகை பாக்கி இல்லாத வியாபா ரிகளுக்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.’’ என் றார்.

 

 

;