districts

img

மின்வாரியத்தைக் கண்டித்து பொதுமக்கள் தர்ணா

தருமபுரி, ஜன.28- தெருவிளக்கு அமைத்து தராத மின்சார வாரியத்தை கண்டித்து, அதிய மான்கோட்டை துணை மின் நிலையத் தில், கிராம மக்கள் தர்ணாவில் ஈடு பட்டனர். தருமபுரி மாவட்டம், ஏ.ஜெட்டி அள்ளி ஊராட்சிக்குட்பட்ட கிராமங்க ளில் தெருவிளக்குகள் வசதி ஏற்ப டுத்தக்கோரி மின்வாரியத்திடம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மனு அளிக்கப்பட் டது. ஊராட்சியில் உள்ள 154 இடங்களில் 27 புதிய மின்கம்பங்களுடன் கூடிய தெருவிளக்குகள் அமைக்க, ஊராட்சி நிர்வாகம் தரப்பில் கடந்த 4 மாதங்க ளுக்கு முன், மின்சார வாரியத்திற்கு சுமார் ரூ.7.60 லட்சம் பணம் செலுத்தப் பட்டது. ஆனால், இதுவரை தெரு விளக்குகள் அமைக்கப்படவில்லை. மின்சார வாரியத்தின் மெத்தனபோக் கால், கிராமங்களை இரவு நேரத்தில் இருள் சூழ்ந்துள்ளது. இதனால் ஆடு கள் திருட்டு, பூட்டி கிடக்கும் வீடுகளில் நகை, பணம் கொள்ளை, வாகன விபத்து ஆகியவை தொடர்ந்து நடை பெற்று வருகிறது. இதனை தடுக்கும்  விதமாக விரைந்து மின்கம்பங்களுடன் கூடிய புதிய தெருவிளக்குகள் அமைத்து தரக்கோரி, மின்சார வாரியத் திற்கு பலமுறை ஊராட்சி மக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்தும், இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.  இதனால் ஆவேசமடைந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு, அதிய மான்கோட்டை துணை மின் நிலைய அலுவலக வளாகத்தில், செவ்வாயன்று  தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த மின்வாரிய உதவி பொறியாளர் பால முரளி, அதியமான்கோட்டை காவல் துறையினர், கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில், கோரிக்கை மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையேற்று தர் ணாவை கைவிட்டு, அங்கிருந்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.