districts

img

என்டிசி ஆலைகளை இயக்கிடுக - தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காத்திடுக

கோவை, டிச.1-  நாடு முழுவதும் உள்ள என்டிசி  பஞ்சாலைகளை இயக்கி, தொழி லாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக்கோரி கோவையில் செவ்வாயன்று அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார் பில் கண்டன இயக்கம் நடை பெற்றது.  ஒன்றிய அரசின் தேசிய பஞ் சாலைக் கழகத்திற்கு  சொந்த மாக நாடு முழுவதும் 23 பஞ் சாலைகள்  உள்ளது.  இவற்றில் தமிழகத்தில் 7 பஞ்சாலைகள்  இயங்கி வருகின்றது. இதில் கோவையில் மட்டும் ஐந்து பஞ்சா லைகள் செயல்படுகிறது. இந்நி லையில் கொரோனா தொற்று முதல் அலையின் காரணமாக கடந் தாண்டு மார்ச் மாதம் என்டிசி பஞ் சாலைகள் மூடப்பட்டது. சுமார் இரண்டு வருடங்கள் கழிந்த பின் னும் என்டிசி பஞ்சாலைகள்  மீண் டும் திறக்கப்படவில்லை.

ஆகவே,  பஞ்சாலைகள் அனைத்தையும்  முழுமையாக இயக்கி வேலை  வழங்க வேண்டும். தொழிலாளர் களுக்கு முழு ஊதியம்  வழங்க வேண்டும் என வலியுறுத்தி தொழி லாளர்கள் தொடர்ந்து போராட் டம் நடத்தி வருகின்றனர்.   முன்னதாக, என்டிசி ஆலை களை பாதுகாப்போம் என்கிற கோரிக்கை முழக்கத்தோடு என் டிசி பஞ்சாலைகளில் உள்ள அனைத்து தொழிற்சங்க கூட்ட மைப்பு சார்பில் கண்டன இயக் கம் நடத்துவது என முடிவெடுக் கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள அனைத்து என்டிசி பஞ்சாலைகள் முன்பு கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எல்பி எஃப் பார்த்தசாரதி, சிஐடியு பத்மநாபன், எச்எம்எஸ் ராஜாமணி, ஐஎன்டியூசி பால சுந்தரம், ஏஐடியுசி ஆறுமுகம் உள் ளிட்ட அனைத்து தொழிற்சங்க இயக்கங்களின் தலைவர்கள் பங் கேற்று கண்டன உரையாற்றி னர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற் றுக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

;