நாமக்கல், மே 14- ராசிபுரம் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுபானக்க டையை அகற்ற வேண்டும் என வலியு றுத்தி, அப்பகுதி பொதுமக்கள் அந்த கடையை முற்றுகையிட்டனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் - பட்ட ணம் சாலையில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மது வாங்குவோர் சாலையோரமாகவும், குடியிருப்புகள் உள்ள இடங்களிலும் அமர்ந்து, மது அருந்திவிட்டு தகராறு செய்வதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் கூறி வந்தனர். இந்நி லையில், அப்பகுதியில் ஒரு சிலர் மது அருந்திவிட்டு தகாத வார்த்தையால் பேசி தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படு கிறது. மேலும், குடியிருப்புப்பகுதி, வயல்வெளியில் கூட்டமாக அமர்ந்து மது அருந்துகின்றனர். பின்னர் மதுப் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவற்றை அங்கேயே போட்டு விட்டுச் செல்கின்றனர். இதனைய டுத்து, ராசிபுரத்தை அடுத்த பட்டணம் 10 ஆவது வார்டு பகுதியைச் சேர்ந்த பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட் டோர், அந்த மதுபானக்கடையை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த ராசி புரம் காவல் ஆய்வாளர் கே.செல்வரா ஜன், பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அப்போது கடையை அகற்ற நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்ததையடுத்து, பொது மக்கள் கலைந்து சென்றனர்.