சேலம், ஜூலை 22- பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வலியுறுத்தி மேட்டூர் அனல் மின் நிலையம் முன்பு மத்திய தொழிற்சங்கங்கள் சார் பில் பிரச்சார இயக்கம் நடை பெற்றது. ஒன்றிய பாஜக அரசின் தொழி லாளர் மற்றும் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங் கங்கள் சார்பில் மாநிலம் தழுவிய பிரச்சார இயக்கம் ஜூலை 20ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த இயக்கத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பெட்ரோலிய பொருட்கள் மீது உயர்த்தப்பட்ட வரிகளை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல்- டீசல்- கேஸ் விலையை குறைத் திட வேண்டும். தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தியதை திரும்ப பெற வேண்டும். பொதுத்துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதை உடனடியாக நிறுத்தப்பட வேண் டும். வேளாண் விளைப் பொருட் களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி பிரச்சார நடை பெற்றது. இந்த நிகழ்விற்கு, ஏஐடியுசி வீ.ராஜேந்திரன் தலைமை ஏற்றார். சிஐடியு சாலைப்போக்குவரத்து சங்கம் மாநில துணைத்தலைவர் எஸ்.கே.தியாகராஜன், சிஐடியு மாவட்டப் பொருளாளர் வி. இளங்கோ, ஐக்கிய சங்க துணைப் பொதுச் செயலாளர் ஜெயச் சந்திரன் நன்றி கூறினார். இதில் தொமுச, ஏஐடியுசி, சிஐடியு, ஐஎன்டியுசி, எச்எம்எஸ் தொழிற்சங்கங்களின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மேட்டூர் அனல் மின் நிலைய தொழிலாளர்களும் திரளாக கலந்து கொண்டனர்.