districts

img

தீபாவளி முன்பதிவு: கொள்ளையில் ஈடுபடும் தனியார் ஆம்னி பேருந்துகள்

சேலம் மாவட்டத்தில் வசித்து வரும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பண்டிகை விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல் கின்றனர். பின்னர் விடுமுறை முடிந்த பிறகு மீண்டும் சேலம் திரும்புகின்றனர். இதையொட்டி தமிழக அரசு சார்பில், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப் பட்டு வருகிறது. அதேபோல் ரயில்வே  நிர்வாகம் சார்பில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இதற்காக முன் கூட்டியே இணையதளத்தில் பயணச் சீட்டு முன்பதிவு செய்யப்படுகிறது. அரசு பேருந்துகள் மற்றும் ரயில்களில் இருக்கை கிடைக்காத பட்சத்தில் பொது மக்கள் பெரும்பாலானோர் ஆம்னி  பேருந்துகளில் பயணம் தள்ளப்படுகின் றனர். இதை சாதகமாக்கி ஆம்னி பேருந் துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், அக்.2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி,

அக்.4 ஆம் தேதி ஆயுதபூஜை, அக்.5 ஆம் தேதி விஜயதசமி என 4 நாட் கள் தொடர் விடுமுறை வருகிறது. அதே போல் அக்.24 ஆம் தேதி தீபாவளி பண்டி கையும் வருகிறது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்ய துவங்கியுள்ளனர். இத னால் நடப்பாண்டும் வழக்கம்போல் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல  மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. உதாரண மாக சேலத்திலிருந்து சென்னைக்கு செல் வதற்கான ஆம்னி ஏ.சி. பேருந்துகளின் பயணச்சீட்டு கட்டணம் குறைந்தபட்சம் ரூ.1500 முதல் அதிகபட்சமாக ரூ.3 ஆயி ரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏ.சி. அல்லாத பேருந்துகளில் ரூ.1000 முதல் ரூ.1800 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தூத்துக்குடி, திருநெல் வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம், திருவனந்தபுரம், எர்ணாகுளம், கொல்லம்  உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல் லும் ஆம்னி பேருந்துகளிலும் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வால் அதிர்ச்சி அடைந் துள்ள பயணிகள், அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய ஆய்வு மேற் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வழக் கம்போல் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர், கட்டணம் உயர்த்தும் தனியார் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். ஆனால், அறிவிப்பு வெறும் அறிவிப் போடு மட்டுமே நின்றுவிடுவதாக பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றஞ் சாட்டியுள்ளனர்.

-எழில், சேலம்.

;