ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து பிப்.23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தை கோவை மாவட்டத்தில் வெற்றிகரமாக்குவது குறித்த தயாரிப்பு கூட்டம் கோவை எச்எம்எஸ் அலு வலகத்தில் வியாழனன்று நடைபெற்றது. இதில் எல்பிஎப், ஐஎன்டியுசி, ஏஐடியுசி, எச்எம்எஸ், சிஐடியு, எம்எல்எப், ஏஐசிசிடியு, எஸ்டிடியு உள்ளிட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.