districts

img

ஆபத்தான நிலையில் மின்கம்பம்

திருப்பூர், பிப்.26- திருப்பூரில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை  மாற்றியமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. திருப்பூர் மாநகராட்சி 6 ஆவது வாா்டு ராதா நகரின் தெற்குப் பகுதியில் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி உள்ளது.  இந்தத் தொட்டிக்கு அருகே உள்ள மின் கம்பம் மிகவும்  சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும், இந்தக் கம்பத்துக்கு செல்லும் மின்சார வயர்கள் தொட்டி யின் இரும்பு ஏணிப்படியில் உரசியபடி செல்கிறது. எனவே,  ஆபத்தான நிலையில் மின்கம்பத்தை மாற்றியமைக்கவும், மின்சார வயர்களை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.