districts

img

மேல்நிலைக் கல்விக்கு தனி இயக்குநரகம்: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்

சென்னை, டிச.7- கல்வியை பொதுப் பட்டிய லில் இருந்து மாநிலப் பட்டி யலுக்கு மாற்றம் செய்திட உரிய நடவடிக்கை வேண்டும் என தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் இரா.பெருமாள்சாமி, பொதுச்செயலாளர் சே.பிரபா கரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பள்ளிக் கல்வித்துறை அமைச் சரை சந்தித்து மனு அளித்தனர். உடன் மாநிலப் பொருளாளர் பொ.அன்பழகன்,  அமைப்புச் செயலாளர் வ.நாராயணன், தலை மையிடச் செயலாளர் எ.ராவ ணன், சட்டச் செயலாளர் சந்திர போஸ், பிரச்சாரச் செயலாளர் வடிவேல் முருகன், செய்தித் தொடர்பு செயலாளர் ம.மகேந் திரன், அரசு உதவி பெறும் பள்ளிச் செயலாளர் ஆ.ராஜா,  மகளிர் பிரிவு செயலாளர் சி.லலிதா ஆகியோர் இருந்தனர். அந்த மனுவின் சுருக்கம் வருமாறு: கடந்த காலங்களில் நடை பெற்ற ஜாக்டோ-ஜியோ போராட் டக் காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்கிய தமிழக முதல்வருக்கும், பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கும் தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கி றது.

கல்வி என்பது பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டி யலுக்கு மாற்றம் செய்திட நடவ டிக்கை எடுக்க வேண்டும்,  நீட் தேர்வில் இருந்து தமிழகத் திற்கு நிரந்தரமாக விலக்கு பெற வேண்டும். மாணவர் நலனுக்கு எதிரான ஒன்றிய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்துவதை நிறுத்த வேண்டும். 14க்கும் மேற்பட்ட அரசு நலத்திட்டங் களை செழுமைப்படுத்தவும் கற்றல், கற்பித்தல் பணியை மேம்படுத்தவும் அலுவலர் பணி யிடங்கள் உருவாக்கப்பட வேண் டும். அரசு உதவி பெறும் பள்ளி களில் மேல்நிலை கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும். 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வுக்கான கையேட்டினை மாணவர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர் களுக்கு மருத்துவம் மற்றும்  பொறியியல் படிப்பு சேர்க்கை யின் போது 2.5 சதவீதம் தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும். மேல்நிலைக் கல்விக்கு தனி இயக்குநரகம் அமைக்க வேண்டும். மேல்நிலைப் பள்ளிக ளில் காலியாக உள்ள ஆசிரி யர் பணியிடங்களையும், எழுத் தர், அலுவலக உதவியாளர் பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும். மேல்நிலைப் பள்ளிகளில் விலங்கியல், தாவர வியல் மற்றும் வணிகவியல் கணக்குப் பதிவியல் பாடங் களைக் கற்பிக்க தனித்தனி ஆசிரியர்களை நியமிக்க வேண் டும். 1.04.2003 முதல் அமலில் உள்ள தன் பங்கேற்பு ஓய்வூதிய திட் டத்தை ரத்து செய்து, பழைய  ஓய்வூதியத் திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். இரண்டு ஆண்டுகளாக நடை பெறாமல் இருக்கும் ஆசிரியர்க ளுக்கான பொது மாறுதல் கலந் தாய்வை உடனடியாக நடத்த வேண்டும். மேலும் பொது மாறு தல் கலந்தாய்விற்கு 3 ஆண்டுகள் பணி புரிந்திருக்க வேண்டும் என்ற  அரசாணையை திருத்தி ஓராண்டு பணிபுரிந்து இருக்க வேண் டும் என்றும், புதிய நியமனத் திற்கும் பதவி உயர்விற்கும் உபரி ஆசிரியர் பணியிட மாற்றத்திற்கும் கால நிபந்தனையின்றி முன்னு ரிமை அளித்திடும் வகையில் மாற்றி அரசாணை வெளியிட வேண்டும். 1.1.2003 முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப் படியை (ஒன்றிய அரசுக்கு இணை யான) உடனடியாக வழங்கிடவும், 1.4.2020 முதல் நிறுத்தப்பட்டுள்ள

ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு பணப் பலனை உடனடியாக வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பி.ஜி. ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுக்கு தடையாக உள்ள அர சாணை 720இல் மாற்றம் செய்து ஒன்றிய அரசு பள்ளிகளில் உள் ளது போன்று செங்குத்து வடி விலான பதவி உயர்வினை அமல் படுத்த வேண்டும். கள்ளர் சீரமைப்பு, ஆதிதிராவிடர் நலத் துறை மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரி யர்களுக்கும், அலகு விட்டு அலகு மாறுதல் அடிப்படையில் மாறுதல்  பெற உரிய ஆணைகள் வழங்க வேண்டும். பள்ளிக்கல்வி துறை யில் பிறப்பிக்கப்படும் அனைத்து அரசாணைகளும் விதிவிலக் கில்லாமல் அரசு கள்ளர் சீரமைப்பு துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கும் அமல்படுத்த வேண்டும். அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பணி மூப்பு அடிப் படையில் இல்லாமல் தகுதி மற் றும் திறமை என்ற அடிப்படை யில் உள்ளதை நீக்க வேண்டும். அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் 30 ஆண்டுகள் பணி முடித்த அனைவருக்கும் ஒரு  சிறப்பு வளரூதியம் அளிக்க  வேண்டும். உயர் நீதிமன்றத்தில் செயல் இழப்பு செய்யப்பட்ட அர சாணை எண் 165, 17.9.2019ஐ முற் றாக விலக்கி கடந்த காலங்களில் மாணவர் எண்ணிக்கைக்கேற்ப கல்வித்துறை அனுமதித்த பணியி டங்களில் நியமனம் பெற்று ஊதியம் இன்றி பணிபுரியும் முது கலை ஆசிரியர்களுக்கு நியமன ஏற்பளிப்பினை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

;