districts

சேலம் மாவட்டத்தில் 50 ஆயிரம் பனை விதைகள் நடவு

சேலம், ஜூலை 9- பனை மரங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க, பனை மேம்பாட்டு திட்டத் தின் கீழ் சேலம் மாவட்டத்தில் 50 ஆயி ரம் பனை விதைகள் நடவு செய்யப் பட்டு வருவதாக அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். புல்லினத்தைச் சேர்ந்த பனை தாவரம், இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகின்றன. பனை தமிழ் நாட்டின் மாநில மரமாகும். பழந் தமிழர் வாழ்வில் பனைமரம் கற்பக விருட்சமாக கருதப்பட்டது. வறட் சியை தாங்கி வளரக்கூடியது. குறிப் பாக ராமநாபுரம், விருதுநகர், சிவ கங்கை போன்ற மாவட்டங்களில் அதிகளவில் பனைமரங்கள் உள் ளன. பனை மரங்கள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றி சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடி யவை. பனைமரம் பலவிதமாக நம் நாட்டில் பயன்பட்டு வருகிறது. குறிப் பாக, கைவினை பொருட்கள் செய்து கைத்தொழில் செய்யவும், பனை  ஓலைகள் மூலம் விசிறி, கூடைகள் போன்றவற்றை விற்பனை செய்ய லாம். மேலும், பனையிலிருந்து கிடைக் கும் நுங்கு, பதநீர், பனைவெல்லம், பனங்கிழங்கு, பனங்கற்கண்டு, கருப் பட்டி போன்றவை உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கிறது. பனை யோலையில் செய்த வீடு மிகவும் குளிர்ச்சி நிறைந்த வீடாக இருக்கும். இதனால் கோடை காலங்களில் நோய் வாய்ப்படுவதில் இருந்து விடுபட லாம். இத்தனை சிறப்புமிக்க பனை மரங்கள் சமீப காலமாக அதிகளவில் அழிக்கப்பட்டு வருவது வேதனைக் குள்ளாகி வருகிறது. பனை மரங்கள் சூளைகளில் எரிக்க அதிகளவில் வெட்டப்பட்டு வருகிறது. இதன் கார ணமாக சமீப காலமாக பனை மரங் கள் வேகமாக குறைந்து வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு போதிய மழை இல்லாததால் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான பனைமரங்கள் அழிந்தன. அந்தாண்டு மட்டும் தமிழ் நாட்டில் 30 சதவிகிதம் பனைமரங்கள்  பட்டுபோனதாக கூறப்படுகிறது.

பனைமரங்களை பாதுகாக்க வேண் டும் என்று பல்வேறு அமைப்பினர் அரசை வலியுறுத்தி வருகின்றனர். பனைமரங்களை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ‘பனை மேம்பாட்டு திட்டம்’ கொண்டு வந்தார். நடப்பாண்டு 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகள் மற்றும் ஒரு லட்சம் பனங் கன்றுகள் வழங்கும் திட்டத்தை முதல் வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத் தார். அந்த வகையில் சேலம் மாவட் டத்தில் பனை விதைகள் ஆங்காங்கே விதைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சேலத்தைச் சேர்ந்த  பனை வாரிய அதிகாரிகள் கூறுகை யில், சேலம் மாவட்டத்தில் எரும பாளையம், அயோத்தியாப்பட்ட ணம், சுக்கம்பட்டி, வலசையூர், வீரா ணம், பேளூர், சிவதாபுரம், இளம் பிள்ளை உட்பட பல பகுதிகளில் பல் லாயிரம் பனைமரங்கள் உள்ளன.  சேலம் கரிய பெருமாள் மலையில் மட்டும் ஆயிரக்கணக்கான பனை மரங்கள் இன்றும் காணப்படுகிறது. பனை மேம்பாட்டு திட்டத்தின்படி சேலம் மாவட்டத்தில் 50 ஆயிரம் பனை விதைகள் ரூ.1.90 லட்சம் மதிப் பீட்டில் நடவு செய்யப்பட்டு வருகி றது. சேலம் மாவட்டத்தில் அரசு புறம் போக்கு நிலம், தனியார் நிலங்களில் இந்த பனை விதைகள் நடவு செய் யப்பட்டு வருகிறது. தற்போது நடவு  செய்யப்படும் பனை விதைகள் 15  ஆண்டுகளுக்கு பிறகு பனைமரமாக வளர்ந்து பலன் கொடுக்கும் என தெரி வித்தனர்.