districts

img

கனமழையால் வேகமாக உயரும் பில்லூர் அணை

மே.பாளையம், மே 18- நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் வேகமாக உய ரும் பில்லூர் அணையால் பல லட் சம் மக்களின் குடிநீர் தட்டுப்படு பிரச் சனை தீர்வுக்கு வரும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர். கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையத்தில் உள்ள பில்லூர் அணை யின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த  சில தினங்களாக பெய்து வரும்  மழை காரணமாக அணையின் நீர் மட்டம் வெகு வேகமாக உயர்ந்து  வருகிறது. கடந்த ஐந்து மாதங்க ளுக்கு மேலாக மழையின்மை மற் றும் முன்கூட்டியே துவங்கிய கடும்  கோடை வெப்பத்தால் கோவை மற் றும் திருப்பூர் மாவட்ட மக்களின் குடி நீர் ஆதாரமாக உள்ள பில்லூர்  அணை வறண்டு விடும் சூழலுக்கு  உள்ளானது. இதனால் 100 அடி  கொள்ளளவு கொண்ட அணையின்  நீர் மட்டம் 50 அடிக்கும் கீழாக சரிந் தது. அணையில் ஏற்கனவே 35  அடிக்கும் மேல் சேறும், சகதியும் நிறைந்திருந்ததால் கோவை மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்யும் முத லாம் மற்றும் இரண்டாம் குடிநீர் திட் டங்களுக்கு அணையில் இருந்து தண்ணீர் எடுக்க இயலாத நிலை ஏற் பட்டது. இதே போல் திருப்பூர் மாநக ருக்கு செல்லும் குடிநீர் திட்டங்கள்  உள்ளிட்ட 15 கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் பாதிக்கப் பட்டு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற் பட்டது. இந்நிலையில், கடந்த சில  தினங்களாக பில்லூர் அணை மற் றும் பவானியாற்றின் நீர்பிடிப்பு பகு திகளில் பெய்து வரும் கன மழையால் பில்லூர் அணைக்கான  நீர்வரத்து அதிகரித்து நீர்மட் டம் வேகமாக உயர்ந்து வருகி றது. வெள்ளின்று கோவை மாவட்டத்தில் அதிகள வாக பில்லூர் அணை பகுதியில் மட் டும் 17 செ.மீட்டர் மழை பதிவாகி யுள்ளது. இதன் காரணமாக அணை யின் தற்போதைய நீர்மட்டம் 84  அடியை கடந்துள்ளது. மழை  மேலும் சில தினங்கள் நீடித்தால்  அணை நிரம்பும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதே போல் இதுவரை  தண்ணீரின்றி ஓடை போல் ஓடிய  பவானியாற்றில் நீர்வரத்து அதிக ரித்து வேகமாக ஓடி வருகிறது.  இதனால் கடந்த சில மாதங்களாக  நீடித்து வந்த குடிநீர் தட்டுப்பாடு தீரும் என்ற நம்பிக்கை உருவாகி யுள்ளது.

;