வனப்பகுதியில் ஆடு மேய்க்க அனுமதி கேட்டு இருளர் மக்கள் ஆட்சியரிடம் மனு
தருமபுரி, மே 21- வனப்பகுதியில் ஆடு மேய்ப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆண்டியூர் கிராம இருளர் இன மக்கள் தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அம்மனுவில், தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், வேடகட்டமடுவு ஊராட்சிக்குட்பட்டது ஆண்டியூர் இருளர் காலனி. இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சொந்தமாக விவசாய நிலம் இல்லாத இப்ப பகுதி மக்கள் ஆடு வளர்ப்பு, வனத்தில் தேன், சுண்டக் காய், காட்டுவள்ளிகிழங்கு சேகரிப்பது, விவசாய கூலி வேலைக்கு செல்வது போன்ற வேலைகளில் ஈடுபட்டு தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இக் கிராமத்தில் பெரும்பகுதி குடும்பத்தினர் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் காலங்காலமாக தீர்த்த மலை வனப்பகுதியில் ஆடுமேய்த்து வருவது வழக்கம். ஆனால், சமீபத்தில் ஆடு மேய்க்க அனுமதி மறுக்கும் வனத்து றையினர், குறைந்தது ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கின்றனர். அன்றாட வாழ்க்கை நடத்த சிரமப்ப டும் இம்மக்கள் அபராதம் கட்ட முடியாமல் சிரமத்திற்குள் ளாகி வருகின்றனர். எனவே, வனப்பகுதியில் ஆடு மேய்யவும், வன சிறுமகசூல் எடுக்கவும் அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறுஅதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கட்டமைப்பு வசதிகளில் தொய்வு
கட்டமைப்பு வசதிகளில் தொய்வு உதகை, மே 21- உதகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முறையான வடி கால் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தாததால், தொடர் மழையால் தண்ணீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடி யாமல் தேங்கின. போக்குவரத்து நெரிசலால் சுற்றுலாப் பய ணிகள் அவதிக்கு உள்ளாகினர். நடப்பாண்டில் கோடை மழை சரியான காலகட்டத்தில் பெய்யாமல் சற்று தாமதமாக கடந்த, மே 4 ஆம் தேதி யன்று முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மேலும் இ- பாஸ் நடைமுறை அமலால் குறிப்பிட்ட வாகனங்கள் அனு மதிக்கப்படுகிறது. ஆனால், உதகையில் பார்க்கிங் வசதி உள்ளிட்ட போதிய கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த வில்லை. இதனால், தொடர்ந்து பெய்து வரும் மழைக்கு இடையே வாகனங்கள் ஆங்காங்கே சென்று வருவதால் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. இதனை யடுத்து, மலர்க்கண்காட்சியை ஒரு வாரம் நீட்டிக்கப்பட்ட தால் சுற்றுலாப் பயணிகள் கணிசமாக வந்து கொண்டி ருக்கின்றனர். இந்நிலையில், திங்களன்று உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா சாலை, தொட்டபெட்டா சாலை, ஸ்பென்சர் சாலை, படகு இல்லம், பேருந்து நிலையம் உள் ளிட்ட சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுற்று லாப் பயணிகள், உள்ளூர் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
ஈரோடு மாவட்டத்தில் மழையளவு
ஈரோடு மாவட்டத்தில் மழையளவு ஈரோடு, மே 21- ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மிதமான மற்றும் பலத்த மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த திங்களன்று காலை முதல் செவ்வாயன்று காலை வரை பரவலாக மிதமானது முதல் பலத்த மழை பொழிவு இருந்தது. ஈரோட்டில் 24 மிமீ, மொடக்குறிச்சி 25 மிமீ, கொடுமுடி யில் 32 மிமீ, கவுந்தப்பாடியில் 29 மிமீ, அம்மாபேட்டையில் 23 மிமீ, வறட்டுப்பள்ளத்தில் 24 மிமீ, கொடிவேரி அணை பகுதி யில் 27 மிமீ, குண்டேரிபள்ளத்தில் 37.20 மிமீ, தாளவாடி யில் 23 மிமீ மழை பொழிவு பதிவானது. மாவட்டத்தில் அதி கபட்சமா 87 மிமீ மழை பொழிவு இருந்தது. இதனையடுத்து நம்பியூரில் 73.20 மிமீ மழை பொழிவு பதிவானது. குறைந்தபட்சமாக சத்தியமங்களத்தில் 19 மிமீ மழை பெய்தது. இதேபோல கோபிசெட்டிபாளையத்தில் 19.20 மிமீ, பவானிசாகர் அணை பகுதியில் 19.40 மிமீ மழை பொழிவு இருந்தது. மாவட்டம் முழுவதும் மொத்தமாக 624.50 மிமீ மழை பொழிவு இருந்ததாகக் கணக்கிடப்பட்டுள் ளது. சராசரியாக 24 மணி நேரத்தில் 36.74 மிமீ பதிவானது. உதகை நீலகிரி மாவட்டத்தில் கடந்த, மே 4 ஆம் தேதியன்று துவங் கிய கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. உதகைக்கு நீராதாரமாக உள்ள பார்சன்ஸ்வேலி, மார்லி மந்து, மேல் கோடப்பமந்து, கீழ் கோடப்பமந்து, ஓல்டு உதகை, கோரி சோலை உட்பட நீராதாரங்களில் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. இதனையடுத்து உதகையில் செவ்வாயன்று மாலை 5:00 மணி நிலவரப்படி, ஒரே நாளில் 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. நீராதாரங்களில் தண்ணீர் அளவு தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.
மின்விபத்துகளை தவிர்க்க பொதுமக்கள் அறிவுறுத்தல்
சேலம், மே 21- மழைக்காலங்களில் ஏற்படும் மின்வி பத்துகளைத் தவிர்க்க பொதுமக்கள் கடைப் பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை கள் குறித்து மின்வாரியம் அறிவுறுத்தி யுள்ளது. இதுகுறித்து சேலம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தண்டபாணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மழைக் காலங்களில் மின் மாற்றிகள், மின் கம்பங்கள், மின்பகிர்வுப் பெட்டிகள் ஆகியவற்றின் அருகே யாரும் செல்லக்கூடாது. மழை யாலும், பெருங்காற்றாலும் அறுந்து விழுந்த மேல்நிலை மின்சார கம்பி அருகே செல்லக் கூடாது. இதுகுறித்து மின்வாரிய அலுவலகத் துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரியத்தின் அலுவலர்களை அணுகவும். ஈரக்கையால் குளிர்சாதனப் பெட்டி, கிரைன் டர், மிக்ஸி, சலவைப்பெட்டி மற்றும் சுவிட்சு களை இயக்கக்கூடாது. இடி அல்லது மின்ன லின் போது, வெட்டவெளியில் இருக்கா தீர்கள். உடனடியாக கான்கிரீட் கூரையிலான பெரிய வீடு போன்ற கட்டடங்களிலோ, உ லோகத்தால் மேலே மூடப்பட்ட பேருந்து, கார், வேன் போன்ற வாகனங்களிலோ தஞ்சமடைய வேண்டும். குடிசை வீடு, மரத்தின் கீழ், பேருந்து நிறுத்த நிழற்கு டையில் தஞ்சமடையக்கூடாது. தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளுக்கு செல்லக்கூடாது. தொலைக்காட்சி, கணினி மற்றும் தொலை பேசி போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகே நிற்கக்கூடாது. பொதுமக்கள் சேதமடைந்த மின் கம்பங்கள், மின் கம்பிகள், தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் மற்றும் சேதம டைந்த மின்சாதனங்கள் குறித்து புகா ரளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை
சேலம், மே 21- தம்மம்பட்டியிலிருந்து சேலத்திற்கு காலை, மாலை வேளைகளில் கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது தம்மம்பட்டி. இங்குள்ள பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, சேலம், நாமக்கல், திருச்சி, பழனி, தஞ்சா வூர், பெங்களூரு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு சேலம், வீரகனூர், துறை யூர், ராசிபுரம் வழியாக பேருந்துகள் இயக்கப் பட்டு வருகின்றன. தம்மம்பட்டியிலிருந்து அதிகாலை காலை 4.30 மணி முதல் முதல் சேலத்திற்கு 30 நிமிடத்திற்கு ஒருமுறை பேருந்து வசதி உள்ளது. பகல் 12.10க்கு தனியார் பேருந்து சேலம் புறப்பட்டுச் செல்லும். அதற்கு பின்னர் 12.35க்கு தம்மம்பட்டியிலிருந்து சேலத்திற்கு ஒரு அரசு பேருந்து புறப்பட்டுச் செல்லும். அந்தப் பேருந்து சேலத்திற்கு 2 மணிக்கு சென்றடையும். அதன்பிறகு பிற்பகல் 2.40 மணிக்கு சேலத்திலிருந்து புறப்படும் அந்த பேருந்து மாலை 4.50 மணிக்கு தம்மம்பட்டியை வந்தடையும். தம்மம்பட்டியில் 12.35க்கு புறப்படும் இப்பே ருந்தில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள் திரளாக சேலம் சென்று வந்தனர். இந்நிலையில் 20 மாதங்களுக்கும் மேலாக இப்பேருந்து நிறுத்தப்பட்டதால் சேலம் செல்லும் பயணிகள் பெரும் அவதிக்குள் ளாகி வருகின்றனர். தம்மம்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து சேலம் செல்வதற்கு 12.10க்கு பிறகு 1.12 மணிக்குத்தான் பேருந்து வசதி உள்ளது. அதேபோல மாலையில் 5.45 மணிக்கு தனியார் பேருந்தும் புறப்பட் டுச் செல்லும். அதற்குபிறகு துறையூ ரிலிருந்து வரும் தனியார் பேருந்து 6.50க்குத் தான் சேலம் செல்கிறது. அந்தப்பேருந்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே, தம்மம்பட்டியிலிருந்து சேலத்திற்கு பகல் 12.35மணிக்கும், மாலை 6 மணி முதல் 6.15 மணிக்கும் தம்மம்பட்டி அரசு போக்கு வரத்து பணிமனையிலிருந்து கூடுதலாக பேருந்து இயக்கினால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இ-சேவை மையங்களுக்கு எச்சரிக்கை
இ-சேவை மையங்களுக்கு எச்சரிக்கை ஈரோடு, மே 21- அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாகக் கட்ட ணம் வசூலிக்கும் இ-சேவை மையங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் இ-சேவை மையங்களுக்கு தமிழ்நாடு மின் ஆளுமை முகமை சேவை கட்டணம் நிர்ணயம் செய்து அறிவித்துள் ளது. அதன்படி வருவாய்த்துறை சான்றிதழ்கள் பெற மனு ஒன்றிற்கு சேவை கட்டணமாக ரூ.60 மட்டுமே பெற வேண் டும். ஓய்வூதிய திட்டங்களுக்கு ரூ.10, இணையவழி பட்டா மாறுதல் விண்ணப்பங்களுக்கு ரூ.60, சமூக நலத்துறை மூலம் திருமண நிதியுதவி மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு நிதி உதவி திட்ட விண்ணப்பத்திற்கு ரூ.120 மற்றும் மாற்றுத்தி றனாளி நலத்துறை தொடர்பான திட்டங்களுக்கு சேவைக் கட்டணமாக ரூ.10 மட்டுமே பெற வேண்டும். இவ்வாறு நிர்ண யம் செய்த கட்டணங்கள் மட்டுமே பெற வேண்டும் என அதிகா ரிகள் தெரிவித்தனர். இதனை மீறும் நபர்களின் இ-சேவை மையத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளனர்.
கூலிப்படையை ஏவி கொல்ல முயற்சி! கல்குவாரி ஒப்பந்ததாரர் மீது விவசாயி புகார்
திருப்பூர், மே 21 - சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரியை எதிர்த்த தால், கூலிப்படையை ஏவி கல்குவாரி ஒப்பந்ததாரர் தன்னை கொல்ல முயற்சிப்பதாக விவசாயி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தனது உயிருக்கு பாதுகாப்பு வழங்க திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் அவர் புகார் அளித்துள்ளார். ஊத்துக்குளி தாலுகா சர்க்கார் கத்தாங்கண்ணி அருகே வெங்கலபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நடரா ஜன். இவர் அதே பகுதியில் செயல்பட்டு வரும் பழனிச் சாமி கல்குவாரி, சட்டவிரோதமாக முறைகேடாக செயல்படு வதால் கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படை யில் ஆய்வு செய்து பழனிச்சாமி கல்குவாரியின் நடை சீட்டுக ளுக்கு தடை விதித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி அன்று வெங்க லபாளையத்தில் காலை 7.30 மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தில் நடராஜன் சென்றபோது அடையாளம் தெரி யாத பிக்கப் வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. வாகனத்துடன் கீழே விழுந்த நடராஜ னுக்கு காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். கல்குவாரி மீது புகார் தெரிவித்து அவர்களது நடை சீட்டு கள் நிறுத்தப்பட்டதால், இதற்கு நடராஜன் தான் காரணம் எனக் கூறி கல்குவாரியினர், திட்டமிட்டு கூலிப்படையை ஏவி கொல்ல முயற்சிக்கின்றனர் என்று நடராஜன் புகார் தெரிவித்துள்ளார். அத்துடன் நடராஜன் வீட்டின் முன்பு இருந்த கண்காணிப்பு கேமராவை மே 1ஆம் தேதி அன்று சில சமூக விரோதி கள் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். மே 8 ஆம் தேதி அன்றும் இவர்களை வீட்டின் அருகாமையில் இருந்த மற்றொ ருவரின் வீட்டு கண்காணிப்பு கேமராவையும் உடைத்துள் ளனர். தன்னை கொலை செய்யும் நோக்கத்தோடு கல்குவா ரியினர் வாகனத்தை ஏற்றியுள்ளனர். எனவே தனக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நடராஜன் கேட்டுக் கொண்டுள்ளார். ஏற்கனவே, ஊத்துக்குளி காவல் நிலையத்தில் 12ஆம் தேதி சம்பவத்திற்கு புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தனது மனுவில் நடரா ஜன் கூறியுள்ளார்.
இ-சேவை மையங்களுக்கு எச்சரிக்கை
ஈரோடு, மே 21- அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாகக் கட்ட ணம் வசூலிக்கும் இ-சேவை மையங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் இ-சேவை மையங்களுக்கு தமிழ்நாடு மின் ஆளுமை முகமை சேவை கட்டணம் நிர்ணயம் செய்து அறிவித்துள்ளது. அதன் படி வருவாய்த்துறை சான்றிதழ்கள் பெற மனு ஒன்றிற்கு சேவை கட்டணமாக ரூ.60 மட்டுமே பெற வேண்டும். ஓய்வூ திய திட்டங்களுக்கு ரூ.10, இணையவழி பட்டா மாறுதல் விண் ணப்பங்களுக்கு ரூ.60, சமூக நலத்துறை மூலம் திருமண நிதி யுதவி மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு நிதி உதவி திட்ட விண்ணப்பத்திற்கு ரூ.120 மற்றும் மாற்றுத்திறனாளி நலத்துறை தொடர்பான திட்டங்களுக்கு சேவைக் கட்டண மாக ரூ.10 மட்டுமே பெற வேண்டும். இவ்வாறு நிர்ணயம் செய்த கட்டணங்கள் மட்டுமே பெற வேண்டும் என அதிகாரி கள் தெரிவித்தனர். இதனை மீறும் நபர்களின் இ-சேவை மையத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரித்துள் ளனர்.
கட்டமைப்பு வசதிகளில் தொய்வு
கட்டமைப்பு வசதிகளில் தொய்வு உதகை, மே 21- உதகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முறையான வடிகால் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தாத தால், தொடர் மழையால் தண்ணீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாமல் தேங்கின. போக்குவரத்து நெரிசலால் சுற்றுலாப் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். நடப்பாண்டில் கோடை மழை சரியான காலகட்டத்தில் பெய்யாமல் சற்று தாமதமாக கடந்த, மே 4 ஆம் தேதியன்று முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மேலும் இ- பாஸ் நடைமுறை அமலால் குறிப்பிட்ட வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. ஆனால், உதகையில் பார்க்கிங் வசதி உள்ளிட்ட போதிய கட்டமைப்பு வசதிகள் மேம்படுத் தவில்லை. இதனால், தொடர்ந்து பெய்து வரும் மழைக்கு இடையே வாகனங்கள் ஆங்காங்கே சென்று வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. இதனையடுத்து, மலர்க்கண்காட்சியை ஒரு வாரம் நீட்டிக் கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் கணிசமாக வந்து கொண்டி ருக்கின்றனர். இந்நிலையில், திங்களன்று உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா சாலை, தொட்டபெட்டா சாலை, ஸ்பென்சர் சாலை, படகு இல்லம், பேருந்து நிலையம் உள் ள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் பொதுமக்கள் கடும் அவ திக்கு உள்ளாகினர்.
மலைக்கிராமங்களில் மரவள்ளிகிழங்கு அறுவடை தீவிரம்
சேலம், மே 21- சேலம் மாவட்டத்தின் மலைக்கி ராமங்களில் கோடை மழை பெய்துள்ளதால், மானாவாரி விளை நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளிகிழங்குகளை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வறட்சியைத் தாங்கி வளர்ந்து மகசூல் கொடுக்கும் தன்மை கொண்ட ஓராண்டு காலப்பயிரான மரவள்ளியை, சேலம் மாவட்டத் தில் அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, பெத்தநாயக்கன் பாளையம், ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, தம்மம்பட்டி, பச்ச மலை, கல்வராயன்மலை, அரு நூற்றுமலை, நெய்யமலை கிரா மங்களிலும், நாமக்கல் மாவட் டம் மங்களபுரம், நாமகிரிப் ப்பேட்டை உள்ளிட்ட பகுதி யிலும், ஆண்டுதோறும் 20 ஆயிரம் ஹெக்டர் பரப்பள்வில் பயிரிடுகின்றனர். குறிப்பாக, சின்ன கல்வராயன், பெரிய கல்வரா யன்மலை, நெய்ய மலை பகுதியில் 100க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் பாசன வசதி யில்லாத புன்செய் நிலங்களிலும் பருவமழை, கோடை மழையைப் பயன்படுத்தி மரவள்ளியைப் பயிரிடும் விவசாயிகள், மீண்டும் அடுத்தாண்டு மழைக்காலத்தில் மரவள்ளிகிழங்குகளை அறுவடை செய்கின்றனர். இடைத்தரகர்கள், வியாபாரிகள் வாயிலாக, வாழப்பா டியை அடுத்த மேட்டுப்பட்டி, ஆத்தூர், காட்டுக்கோட்டை, தலை வாசல் உட்பட சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் செயல்படும் மர வள்ளி அரவை ஆலைகளுக்கு மரவள்ளிக் கிழங்குகளை விற்ப னை செய்கின்றனர். சேலம் மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் மட்டும் 100க்கும் அதிகமான தனியார் மரவள்ளி அரவை ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் மரவள்ளிகிழங்கு உற்பத்தி, ஸ்டார்ச் (கிழங்கு மாவு), ஜவ்வரிசி தயாரிப்பிலும் சேலம் மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. மரவள்ளிகிழங்கு சார்ந்த மதிப்புக் கூட்டுப் பொருட்களைச் சந்தைப்படுத்தும் சேகோசர்வ் சேலத்தில் இயங்கி வருகிறது. ஜவ்வரிசி உணவு பண்டங்கள் தயாரிக்கவே பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், ஸ்டார்ச் உணவாக மட்டுமின்றி, மருந்து மாத்திரைகள் தயாரி க்கவும் பயன்படுகிறது. இதனால் மருந்து மற்றும் உணவுப்பொ ருட்கள் தயாரிக்கும் பிரபல நிறுவனங்களும் ஸ்டார்ச்-யை கொள்முதல் செய்கின்றனர். இதனி டையே, கல்வராயன்மலை, நெய்ய மலைப் பகுதியில் கடந்தாண்டு கோடை மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் மானாவாரி நில ங்களில் பயிரிட்ட மரவள்ளிக் கிழங்குகள் அறுவடைக்கு தயா ரான நிலையிலும், அறுவடை செய்வதற்கு நிலத்தில் போதிய ஈரப்பதம் இல்லாததால் கோடை மழையை எதிர்பாா்த்து காத்தி ருந்தனர். இந்நிலையில் கல்வரா யன் மலை, நெய்யமலை, சந்து மலை கிராமங்களில் பரவலாக கோடை மழை பெய்ததால், மானாவாரி நிலங்களில் பயிரி டப்பட்டுள்ள மரவள்ளிக் கிழங்கு களை அறுவடை செய்வதற்கு போதிய ஈரப்பதம் ஏற்பட்டது. இதனால், மரவள்ளிக் கிழங்கு களை அறுவடை செய்து விற்பனை செய்யும் பணியில் மலைக் கிராம விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள் ளனர்.
இணையதளப் பிரச்சனை: திருப்பூர் ரேசன் கடைகளில் விற்பனை பாதிப்பு
திருப்பூர், மே 21 – திருப்பூர் ரேசன் கடைகளில் இணையதள இணைப்பு (சர்வர்) பிரச்சனை ஏற்பட்டதால் ஒன்றரை மணி நேரம் விற்பனை பாதிக்கப் பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் 880 முழு நேர ரேசன் கடைகள் உள்பட மொத் தம் 1135 ரேசன் கடைகள் செயல் பட்டு வருகின்றன. இந்த கடைக ளில் பாய்ண்ட் ஆப் சேல் (பிஓஎஸ்) எனப்படும் கருவி மூலம் பயனாளி களின் கைரேகை பதிவு செய்யப் பட்டு பொருட்கள் வழங்கப்படு கின்றன. ஏற்கெனவே இருக்கும் பிஏஎஸ் கருவிகளில் ரேசன் கார்டு களை ஸ்கேன் செய்து, கை ரேகை பதிவு செய்து பில் போடுவது தனித்தனி கருவிகளாக இருந்தன. தற்போது மேம்படுத்தப்பட்ட பிஓஎஸ் கருவிகளை அரசு ரேசன் கடைகளுக்கு வழங்கியுள்ளது. திருப்பூரில் 810 ரேசன் கடைகளில் புதிய பிஓஎஸ் கருவிகள் வழங்கப் பட்டுள்ளன. அனைத்து கடைகளும் கண் கருவிழி பதிவு செய்யும் கருவி யும் வழங்கப்பட உள்ளது. முதல் கட்டமாக 70 ரேசன் கடைகளுக்கு இந்த கண் கருவிழி பதிவு செய் யும் கருவி வழங்கப்பட்டு பரி சோதிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து அனைத்துக் கடைக ளுக்கும் கண் கருவிழி பதிவு கருவி வழங்கப்பட உள்ளது. அதேசமயம் மேம்படுத்தப்பட்ட பிஓஎஸ் கருவிகளில் கை ரேகை பதிவு, ரேசன் கார்டு ஸ்கேன் செய் வதுடன், பயனாளிகள் வாங்கக்கூ டிய உணவுப் பொருட்கள் விப ரம், ரசீது ஆகியவையும் ஓரே கரு வியில் அச்சிடப்பட்டு வழங்கும் வசதி உள்ளது. இத்துடன் இக்கரு விகள் அதிநவீன 5ஜி இணைப்பு கொண்ட இரு சிம் கார்டுகள் பொருத்தப்பட்டிருக்கும். இத னால் இணையதள இணைப்பு சிரம மின்றி அதிவேகமாக செயல்படக் கூடியதாக இருக்கும் என்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறை யினர் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் செவ்வா யன்று காலை 11 மணியளவில் திருப்பூரில் உள்ள பல்வேறு ரேசன் கடைகளில் பில் போடுவதில் பாதிப்பு ஏற்பட்டது. புதிய பிஓஎஸ் கருவிகளில் இணையதள இணைப்பு கிடைக்காமல் பாதிக் கப்பட்டது. இதனால் பயனாளி கள் பொருட்கள் வாங்குவது தடைப் பட்டது. ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் இந்த பாதிப்பு நீடித்தது. அனைத்துக் கடைகளின் பிஓஎஸ் இணைக்கப்பட்டுள்ள மைய சர்வர் வேகம் குறைந்ததால் இந்த நிலை ஏற்பட்டதாக ரேசன் கடை விற்பனையாளர்களிடம் அரசு நிர்வாகத்தினர் தெரிவித்தனர். ஒன்றரை மணி நேர பாதிப்புக்குப் பிறகு சர்வர் இணைப்பு வேகம் சரி செய்யப்பட்டு பொருட்கள் விநியோ கம் சீராக நடைபெற்றது என்று கடை விற்பனையாளர்கள் தெரிவித்த னர்.
அரசு ஐடிஐ-களில் மாணவர் சேர்க்கை
திருப்பூர், மே 21 – திருப்பூர் மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலை யங்களில் (ஐடிஐ) மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. திருப்பூர், தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய ஊர்களில் அரசு ஐடிஐ செயல்பட்டு வருகிறது. இங்கு சேர விரும்பும் மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 8 மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், 9, 10, 11, 12ஆம் வகுப்பு தவறியவர்களும், கல்லூரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். கல்விக் கட்டணம் இலவசம். மேலும் விபரங்களுக்கு, திருப்பூர் (97908 38912), தாராபுரம் (98424 81456). உடுமலைப்பேட்டை (63745 39283) ஆகிய எண்க ளில் தொடர்பு கொள்ளலாம் என்று திருப்பூர் மாவட்ட நிர்வா கம் தெரிவித்துள்ளது.
உதகை கூடுதல் அரசு பேருந்துகள் இயக்கத்தால் போக்குவரத்து கழகத்திற்கு ரூ. 60 லட்சம் வசூல்
உதகை கூடுதல் அரசு பேருந்துகள் இயக்கத்தால் போக்குவரத்து கழகத்திற்கு ரூ. 60 லட்சம் வசூல் உதகை, மே 21- உதகை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பேருந்து இயக்கத்தால், 60 லட்சம் ரூபாய் வசூலாகி யுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகையில் கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக உதகை அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் கடந்த 1 ஆம் தேதியன்று முதல் சுற்று கூடுதலாக பேருந்து இயக்கப்பட்டது. இப்பேருந்துகள் உதகை பேருந்து நிலையத்தில் இருந்து படகு இல்லம், பிங்கர் போஸ்ட், தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டது. சராசரியாக, அப்பேருந்துகளில் தினமும், 3 லட்சம் ரூபாய் வசூ லானது. 20 நாட்களில், 60 லட்சம் ரூபாய் வசூலாகியுள்ளது. அரசு போக்குவரத்து கழகத்தின் இந்த சிறப்பான திட்டத் தால் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் பயனடைந் துள்ளனர்.
கன்னிமார் ஓடையில் வெள்ளப்பெருக்கு – மக்கள் கடும் அவதி!
சேலம், மே 21- சேலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கந்தாஸ்ரமம் பகுதியில் உள்ள கன்னிமார் ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெருவெள் ளத்தால், சீலநாயக்கன்பட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகி றது. இதனால், பல்வேறு குளங்கள், ஏரிகள், ஆறுகள் மற்றும் ஓடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில், சேலம் சீலநாயக்கன் பட்டி அருகில் உள்ள கன்னிமார் ஓடை யில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஓடையில் இருந்து வெளியேறும் வெள்ள நீர் அருகில் உள்ள சீலநா யக்கன்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் ஆறு போல் ஓடி வருவதால், அப்பகு தியை கடந்து செல்லும் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலைமை ஏற்பட்டுள் ளது. இதனால் சீலநாயக்கன்பட்டி பகுதி யில் மூன்று மணி நேரமாக போக்குவ ரத்து நெரிசல் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி, சீலநாயக்கன்பட் டியில் தாழ்வான பகுதிகளில் உள்ள 50க் கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமலும், வேறு இடத்திற்கு செல்ல முடியாமலும் மக்கள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடி நடவ டிக்கை எடுக்க வேண்டுமெனவும் மக் கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதிகாரிகளின் அலட்சியத்தால் சிறுவன் மரணம் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க சிபிஎம் வலியுறுத்தல்
சேலம், மே 21- ஓமலூர் அருகே மின்சார வாரியத் தின் கவனக்குறைவால் 8 வயது சிறுவன் மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலியான சிறுவனின் மரணத்திற்கு உரிய நீதி விசா ரணை மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்டச் செய லாளர் மேவை சண்முக ராஜா வெளி யிட்டுள்ள அறிக்கையில், சேலம் மாவட் டம், ஓமலூர் அடுத்துள்ள நல்லாகவுண் டனூர் அருந்ததியர் காலனியைச் சேர்ந் தவர் வெங்கடேசன் - ரோஜா தம்பதியி னர். இவர்களின், எட்டு வயதில் மகன் அங்குள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், இச் சிறுவன் அப்பகுதியில் மின்மோட்டார் அறையில் இருந்து மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள் ளான். இந்த மின்மோட்டார் அறையிலி ருந்து பல நாட்களாக மின்சாரம் கசிந்து வருவதாக புகார் தெரிவித்தும், ஊராட்சி நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. எனவே, அதிகாரிக ளின் அலட்சியத்தால் சிறுவன் இறந்துள் ளார். எனவே பலியான சிறுவனின் குடும் பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி தர வேண்டும். சிறுவனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள் ளது.