districts

img

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மனு

தருமபுரி, மே 13- குடிநீர் கேட்டு காலிக்குடங்க ளுடன் பொதுமக்கள் தருமபுரி ஆட் சியர் அலுவலகத்தில் மனு அளித்த னர். தருமபுரி மாவட்டம், காரிமங்க லம் ஒன்றியம், இண்டமங்கலம் ஊராட்சிக்குட்பட்டது இண்டமங்க லம் காலனி. இப்பகுதியில் 200க்கும்  மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.  ஏழை மக்கள் அதிகம் வசிக்கும் இப் பகுதியில் நீண்டகாலமாக குடிநீர் பிரச்சனை உள்ளது. தற்போது கோடைகாலம் என்பதால் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் குடி நீர் தேடி 3 கிலோ மீட்டர் நடந்து  சென்று எடுத்துவர வேண்டியுள் ளது. கூலி வேலை செய்து பிழைப்பு  நடத்திவரும் பொதுமக்கள், பணம்  கொடுத்து குடிநீர் வாங்க வழி யில்லை. இதில் பலர் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். கால்ந டைகளுக்கும் தண்ணீர் கிடைப்ப தில்லை. இதுகுறித்து ஊராட்சி  மன்றத் தலைவர், காரிமங்கலம்  வட்டார வளரச்சி அலுவலர் ஆகி யோரிடம் பலமுறை மனுஅளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை. மேலும், இப்பகுதி யில் இரண்டு குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டன. ஆனால், தொட் டிகளுக்கு குழாய்கள் அமைக்கா மல் வேலை பாதியில் நிற்கிறது. எனவே, இந்த தொட்டிகளுக்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எங்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் வழங்க வேண் டும் என வலியுறுத்தி அப்பகுதி  பொதுமக்கள் காலிக்குடங்களு டன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் மனு அளித்தனர்.  வீடு கேட்டு இருளர் இன மக்கள் மனு அரசு தொகுப்பு வீடு கட்டித்தர வேண்டும் என வலியுறுத்தி, குண் டல்மடுவு இருளர் இன மக்கள் தரும புரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் மனு அளித்தனர். அம்மனுவில்  கூறியிருப்பதாவது, பாப்பிரெட்டிப் பட்டி வட்டத்திற்கு உட்பட்டது  மெணசி ஊராட்சி. இந்த ஊராட் சிக்குபட்ட குண்டல்மடுவு கிராமத் தில் 50க்கும் மேற்பட்ட இருளர் சமூக  மக்கள் வசிக்கின்றனர். வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் இம்மக் கள் கூலி வேலை செய்து வாழ்க்கை  நடத்தி வருகின்றனர். இங்கு ஏற்க னவே பல ஆண்டுகளுக்கு முன் அரசு தொகுப்பு வீடு வழங்கி அதில்  அம்மக்கள் குடியிருந்து வருகின்ற னர். குடியிருக்கும் வீடுகள் பல, பழு தடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. மழை பெய்தால் ஒழு கும் நிலைமை உள்ளது. பழுத டைந்த வீட்டை சரிசெய்ய எங்களி டம் பணம் இல்லை. இந்த பழுத டைந்த வீட்டிலேயே இரண்டு, மூன்று குடும்பங்களாக வசித்துவ ரும் அவலநிலை உள்ளது. எனவே,  பழுதடைந்த வீட்டை சரிசெய்ய வும், வீடு இல்லாதவர்களுக்கு புதிய வீடும் கட்டித்தர வேண் டும். இவ்வாறு அதில் வலியுறுத்தப் பட்டுள்ளது.

;